திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இப்பொதுக்கூட்டத்தில் மதரஸா மாணவிகளின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு சம்பந்தமான கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது ,கண்காட்சியில் வைக்கப்பட்ட பேனர்கள் பெரும் திரளாக ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்......
Tuesday, 29 December 2015
ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி ,அவர்களும்,அன்பான அழைப்பு என்ற தலைப்பில் சகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் உரையாற்றினார்கள்,இப்பொதுக்கூட்டத்தில் மதரஸா மாணவிகளின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு சம்பந்தமான கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது , பெரும் திரளாக ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்......
பிறமத தாவா - V.K.P கிளை
திருப்பூர் மாவட்டம்,V.K.P கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக லேம்ப் போஸ்டர் ஒட்டப்பட்டது, போஸ்டர் ஒட்டும் பொழுது ஷிர்க் என்றால் என்ன? என்று மாற்றுமத சகோதரர் ஒருவர் கேட்டார் அவருக்கு ஷிர்க் பற்றி விளக்கி சொல்லப்பட்டது.திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் மாற்று மத சகோதரர் நம் ஜமாத் செய்கின்ற மனித நேயப்பனியை பாராட்டினார்.....அல்ஹம்துலில்லாஹ்......
நிலவேம்பு கஷாயம் வினியோகம் - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜாமஅத் காங்கயம் கிளை மற்றும் காங்கயம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு இணைந்து 26-12-2015 அன்று டெங்கு நோய் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது,நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் முதலில் அரசு சித்தமருத்துவர் நிலவேம்பு கசாயத்தின் தன்மையை பற்றி விளக்கமளித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார் பிறகு முஸ்லீம் வீதியில் வீடுவீடாகவுகம் கடைகளுக்கும் பேருந்துநிலையத்திலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது,.....அல்ஹம்துலில்லாஹ்......
தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-12-2015 அன்று மாணவரணி சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரமாக தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடந்தது ,சகோ.பஜுலுல்லாஹ் மற்றும் சகோ.அப்துல்லாஹ் ஆகியோர் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்......
Subscribe to:
Posts (Atom)