Friday, 10 October 2014

கூட்டுக் குர்பானி - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 6-10-2014 அன்று  கூட்டு குர்பானியில் 7 மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சியை கூட்டில் சேர்ந்த நபர்களுக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஹஜ் பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  6-10-2014 அன்று நபிவழி அடிப்படையில் காலை 7:30 க்கு மணிக்கு  ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். சகோ. அன்சர் கான் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

15_ முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் - பெரிய தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக கடந்த 18.09.14 அன்று அல்காயிதா இயக்கத்தை கண்டித்து இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் தலைப்பில் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

01.10.14 _ தெருமுனைப் பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக  01.10.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், குர்பானி சட்டம் என்ற தலைப்பில் சகோ பஷீர் அலி உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - பல்லடம் கிளை....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 06.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ. 5000 வாழ்வாதார உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 08.10.2014 அன்று உடுமலையை சேர்ந்த ஏழை சகோதரர் பசீர் அவர்களுக்கு ரூ.5,000 வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.10,000 வட்டியில்லா கடன் உதவி - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 1/10/14 அன்று மக்தப் மதரஸா செட் அமைப்பதற்கு ரூபாய் 10000 வாவிபாளையம் கிளைக்கு கடன் உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 09-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "இறுதிநாளின் முன்னறிவிப்பு" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08-10-14 அன்று விஜயகுமாரி என்ற பிற மத சகோதரிக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08-10-14 அன்று உஷா என்ற பிற மத சகோதரிக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...