Tuesday, 3 November 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 01-11-2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 02-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோதரர் முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  மூஸா நபியின் பிரார்த்தனை  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ,VSA நகர் கிளை சார்பாக 02-11-15 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் அல் ஹுமஸா,அல்ஃபீல்,மற்றும் குரைஷ் அத்தியாயங்கள் படிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 31-10-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்தம் கேட்டு அனுகிய ஸ்ரீஹரி என்ற பிறமத  சகோதருக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது .மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்....?" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததானம் - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 31-10-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட  ராமாத்தாள் என்ற  பிறமத சகோதரிக்கு O - negative இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 1-11-15 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப்  பிறகு  பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ: சேக்பரீத் அவர்கள் "நாவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....(புகைப்படம் எடுக்கவில்லை)

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 01-11-2015 அன்று மாபெரும்  இஸ்லாமிய  மார்க்க விளக்க பொதுக்கூட்டம் கடுமையான  எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது ,இறைவன் அருளால்  மழையிலும் மாநாடு போல மக்கள்  திரள பொதுக்கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது ,இதில் மாவட்ட பேச்சாளர் சகோ .அப்துர்ரஹ்மான் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அரும்பணிகள் என்ற தலைப்பிலும் ,மாநில பேச்சாளர் சகோ.அப்துர் ரஹ்மான்  ஃ பிர்தவ்சி  அவர்கள் மாநபி வழியா மத்ஹப் வழியா என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....