Tuesday, 23 July 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை யின் சார்பாக 14.07.2013 அன்று  கோம்பைதோட்டம் பகுதியில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். அஹமது கபீர்  அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார் 

தாராபுரம் வடிவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 23.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.வடிவேல் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1  மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, கடவுள் யார் ?DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.ஸ்டீபன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 20.07.2013 அன்று இஸ்லாமிய மார்க்கம் குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட தலைமை மர்கசுக்கு வருகை தந்த   பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுகேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாமனிதர்நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள் வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹுவின் வரம்புகள் _உடுமலைகிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.


21.07.2013 அன்று  "அல்லாஹுவின் வரம்புகள் " எனும் தலைப்பில் சகோ.அஹமது கபீர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.