Saturday, 3 August 2019

மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி _ திருப்பூர் மாவட்டம்










































தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் 02/08/2019 அன்று மாலை 4:45 முதல் 6:45 வரை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோதரர்.அபூபக்கர் சஆதி அவர்கள் அரபு உச்சரிப்பு மற்றும் அரபி இலக்கண வகுப்பு நடத்தினார்கள்.

TNTJ பேச்சாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் misc., அவர்கள் மக்தப் மதரஸாக்களின் அவசியமும், அவற்றை சிறப்பாக நடத்துவதால் கிடைக்கும் ஈருலக பயன்களும் பற்றி விளக்கம் வழங்கினார்கள்.

மாவட்ட துணைத்தலைவர் சகோதரர்.யாஸர் அராபத் அவர்கள் மக்தப் மதரஸா பாடத்திட்ட வழிகாட்டுதல், மதரஸா ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள், மற்றும் கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.



மேலும் வருங்காலத்தில் மதரஸா செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும், மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு  கூட்டம் 02/08/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 5:40 மணி முதல் நடைபெற்றது.


இந்த வாரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசித்து, மாவட்ட நிர்வாகிகளின் பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார சுவர் விளம்பரங்கள் மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்