Wednesday, 31 October 2018

மாவட்டத்தில் உள்ள மக்தப் மதரஸாக்களில் ஆய்வு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 29, 30/10/2018 ஆகிய இரு நாட்கள் மாவட்டத்தில் உள்ள மக்தப் மதரஸாக்களில் நேரில் ஆலோசனை வழங்கப்பட்டது.


மாவட்ட மதரஸாக்கள் பொறுப்பாளர் மாவட்ட. துணைத் தலைவர் சகோ யாசர் அவர்கள்,




மங்கலம், ரம்யா கார்டன், கோம்பைத் தோட்டம், வெங்கடேஷ்வரா நகர், பெரிய கடை வீதி, பெரிய தோட்டம்
ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மதரஸா களுக்கு நேரில் சென்று  மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளை சந்தித்து, மதரஸா குறை நிறைகளை கேட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் தலைமை அறிவித்துள்ள திருக்குர்ஆன் மனனம், கிராத் போன்ற போட்டிகள் குறித்து விளக்கமளித்து மாணவர்கள் கலந்து கொள்ள ஆர்வமூட்டபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்தியன்நகர் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.10.2018. அன்று ஃபஜர் தொழுகைக்குபின். இந்தியன்நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக் பாரித் அவர்கள் நேரில் சென்று கிளை நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து,
தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாடு பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் கிளை சார்பில் சின்னவர் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட மதரசா பணிகளை பார்வையிட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்