Thursday, 22 September 2016
"முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை 16-09-2016 அன்று ஜும்மா விற்கு பிறகு மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட து.செயலாளர் அப்துர் ரஷீது ஆகியோர் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.இதில் கிளையில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும்.(இன்ஷாஅல்லாஹ்) எதிர் வரும் டிசம்பர் 18 ல் நடைபெறவிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான பணியை தாராபுரத்தில் துவங்குதல் சம்பந்தமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்...
ஹஜ்பெருநாள் தொழுகை பிறகு குர்பானி இறைச்சி வினியோகம் - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 13-09-2016 அன்று ,ஹஜ்பெருநாள் தொழுகை பிறகு குர்பான் இறைச்சி முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மொத்தம் 75 குடும்பங்களுக்கு குர்பான் இறைச்சி வினியோகம் செய்யப்பட்டது. அதில் பிறமத சகோதர்களுக்கு ஏன் இந்த தியாக திருநாள் என்பதையும் பிறர் நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்றும் அவர்களுக்கு தாவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹுதா மக்தப் மதரஸா ஆண்டு விழா - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,ஹஜ்பெருநாள் 13-09-2016(செவ்வாய்) அன்று அல்ஹுதா மக்தப் மதரஸா மாணவ,மாணவிகளின் இராண்டாம் ஆண்டு மார்க்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நாற்பது குழந்தைகள் கலந்து கொண்டு,உரையாடல் மற்றும் விவாதங்கள் மற்றும் பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நாற்பது குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ் ...
Subscribe to:
Posts (Atom)