Monday, 4 February 2013

மார்க்க விளக்க பொது கூட்டம் _மங்கலம் _03022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 03.02.2013அன்று மாலை 06.45 மணி முதல் 10.00 மணி வரை  மங்கலம்-நால்ரோடு எனும் பகுதியில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இதில்  மாநிலபேச்சாளர். சகோதரர்.திருப்பூர் அஹமது கபீர்  அவர்கள்
"தவ்ஹீதுக்கு பின் வந்த ஏற்றங்கள்" எனும் தலைப்பிலும்,


மாநிலதணிக்கைகுழுஉறுப்பினர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் பிர்தௌசி  அவர்கள்” வழிகெடுப்பவர் யார் ?”எனும் தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.






 ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் .
சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம்இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர்.



அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தில் பெண்களின் நிலை _பெண்கள் பயான் _மங்கலம் _29012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக 
29-01-2013 அன்று  மாலை  05:00 மணி முதல் 06:00  மணி வரை
கிடங்குத்தொட்டம் என்ற பகுதில் பெண்கள் பயான் நடைபெற்றது
.
இந்த பயானில் சகோதரி சுமையா அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்

பில்லி சூனியம் _வரதட்சனை _பெண்கள் பயான் _மங்கலம் _28012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 28-01-2013 அன்று மாலை மைதீன்தோட்டம் என்ற பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி சுமையா அவர்கள் பில்லி சூனியம் என்ற தலைப்பிலும் சகோதரி ஹாஜிரா வரதட்சனை  என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

விஸ்வரூபம் அடுத்தது என்ன? _நேரடி ஒளிபரப்பு _ மங்கலம் _27012013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 27-01-2013 அன்று சென்னையில் நடைபெற்ற விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை புரஜெக்ட்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.