Tuesday, 3 September 2013

விபத்தில் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ரூ.17282/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 02.09.2013 அன்று   திருப்பூர் பகுதியை சேர்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சகோ.காஜாமைதீன் அவர்களின் சிகிச்சை செலவினக்களுக்காக , ரூ.17282/= மருத்துவஉதவி  திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்காக நிதியுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் 03.09-2013 அன்று TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் வசூல் மூலம் திரட்டிய நிதியுதவி  ரூ.9,838/=சகோ.கோவை சஹாப்தீன் வசம்  உடுமலை  கிளை நிர்வாகிகள்   வழங்கினர்.

பிறமத சகோதரர்.நாகராஜன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்வழங்கி இஸ்லாம் குறித்த தாவா _தாராபுரம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 02.09.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர். நாகராஜன் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1, மாமனிதர் நபிகள் நாயகம்-1, மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1,  ஆகிய புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பெரியகடைவீதி கிளை மதரசா பணிக்கு 13625/= ரூபாய் நிதியுதவி _ கோம்பை தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 01.09.2013 அன்று  திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை மதரசா பணிக்கு 13625/= ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருப்பூர் ஏழை சகோதரரின் நரம்பு பாதிப்பு சிகிச்சைக்காக , ரூ.15,000/= மருத்துவஉதவி _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை  சார்பில் 01.09.2013 அன்று   திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோ.சேக் அப்துல்லாஹ் அவர்களின் நரம்பு பாதிப்பு  சிகிச்சைக்காக , ரூ.15,000/= மருத்துவஉதவி  கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் _S.V. காலனி கிளைதெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 01.09.2013 அன்று 
S.V. காலனி  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  பசீர்அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
 அல்ஹம்துலில்லாஹ்

"வாய் திறக்காதது ஏன்?" -கண்டன போஸ்டர்கள் -மடத்துக்குளம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம் கிளை சார்பாக 31.08.2013 அன்று, 
மடத்துக்குளம் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்?  என்ற வாசகங்களுடன் கூடிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

"வாய் திறக்காதது ஏன்?" -கண்டன போஸ்டர்கள் -S.V. காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்  S.V. காலனி கிளை சார்பாக 31.08.2013 அன்று, 
S.V. காலனி பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்?  என்ற வாசகங்களுடன் கூடிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.