Wednesday, 2 November 2016
பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் போஸ்டர் - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 6 ந்தேதி நடைபெறும் பேரனி & பொதுக்கூட்டம் குறித்த போஸ்டர் 500 அடிக்கப்பட்டு கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.இதில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ந்தேதி நடைபெறும் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு குறித்த தகவலுடன் அடிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
நிதியுதவி - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 31-10-2016 (திங்கள்) அன்று (tntj மாநில தலைமை நடத்தும் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்க்காக தாராபுரம் முக்கிய கடைகளில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.) அதனுடைய பொருளாதாரத்தை ரூ,19,125 யை அதனுடைய பொருப்பாளர் கோவை சகாப்தீன் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் அவசர செயற்குழு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 31-10-2016 அன்று மாலை 4.45 மணிக்கு மாவட்ட தலைமையகத்தில் வைத்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 6 ந்தேதி நடைபெறும் பேரனி & பொதுக்கூட்டம் குறித்து அவசர செயற்குழு நடைபெற்றது,இதில் மாவட்ட பொருளாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் பேரணி & பொதுக்கூட்டம் குறித்தும், மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூசைன் அவர்கள் இந்நிகழ்ச்சி சார்ந்த கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார்கள்,மேலும் கிளை நிர்வாகிகளுக்கு பேருந்திலும் அதற்கு முன்னும், பின்னும் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் சுற்றறிக்கையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-10-2016 அன்று ஏழு இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி,மங்களம் தவ்பீக்,சையது இப்ராஹிம் ஆகியோர் ** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
** தலாக் மற்றும் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 30-10-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தேவராயம் பாளையம் பகுதியில் சுன்னத் ஜமாத் பள்ளி அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** தலாக் மற்றும் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)