Tuesday, 11 April 2017
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 06-04-17 வியாழன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள் 6 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
அவசர செயற்குழு கூட்டம் _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 10/04/2017 அன்று மாலை 7மணி முதல் 9 மணி வரை மாவட்ட மர்கஸில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் மாநாட்டிற்காக இதுவரை செய்த பணிகள் பற்றியும் இனி செய்ய வுள்ள பணிகள் பற்றியும் விளக்கினார்கள்.
திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் . சகோ. உடுமலை அப்துர்ரஹ்மான் அவர்கள் கிளை செய்த பணிகள் பற்றி கேட்டறிந்து இனி செய்யவுள்ள பணிகள் பற்றி விளக்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு செயல்திட்டங்கள், ஆலோசனைகள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)