|
Add caption |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக 15.09.2013 அன்று காலை 5.45 முதல் இரவு 8.30 வரை திருப்பூர் ரோஜா மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மற்றும் பேச்சாளர்களுக்கான தர்பியா நடைபெற்றது.இந்த பயிற்சி முகாம் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பல்வேறு அவசியமான முக்கிய தகவல்களை அறிந்து செயல்பட ஏதுவாக அமைந்தது.இந்த பயிற்சி முகாம் பற்றியும்,எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங்கள் பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 17.09.2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கிராமப்புற தாவாஊத்துக்குளி பகுதியில் சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை தழுவிய நான்கு குடும்பத்தினர்கள் இஸ்லாமிய அடிப்படைகளை தெரியாமல் இருப்பதால் , தூய இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து வாழ விரும்புவதை கேள்விப்பட்ட திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 17.09.2013 அன்று நேரில் சென்று சத்திய இஸ்லாமிய மார்க்க விளக்கங்கள் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்மேலும் அல்குர்ஆன் தமிழாக்கம் 2, மாமனிதர் நபிகள் நாயகம் 2, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் 2, துவாக்கள் தொகுப்பு 2, மனனம் செய்வோம் 2, ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 17.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோ.ரஹமத்துல்லாஹ் அவர்களின் தலையில் கட்டி அறுவை சிகிச்சை செலவினக்களுக்காக , ரூ.5452/= மருத்துவஉதவி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 17.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த உடலில் கட்டிகள் ஏற்ப்பட்டு பாதிக்கப்பட்ட சகோ.சுகில் அஹ்மது அவர்களின் சிகிச்சை செலவினக்களுக்காக , ரூ.5451/= மருத்துவஉதவி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.