Tuesday, 25 November 2014

பிற மத சகோதரிக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-11-14  அன்று சுகன்யா என்ற சகோதரிக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஜின்னா மைதானம் கிளை சார்பாக இரத்ததானம்...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக 21/11/14 அன்று தாராபுரம் அரசு மருத்துவ மனையில் ரேவதி என்கின்ற பெண்மணிக்கு பிரசவ சிகிச்சைக்காக B (-) இரத்தம் தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தாராபுரம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக 200 போஸ்டர்கள்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக கடந்த 21.11.14 அன்று தாராபுரத்தில் நடக்கவிருக்கும்பொதுக்கூட்டம் சம்பந்தமான 200 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பள்ளிக் கட்டுமான உதவி ரூ.5100 - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.5100/= நிதிஉதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிற மத சகோதரருக்கு திருக்குர்ஆன் - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர்  கிளை சார்பாக  22.11.2014 அன்று பிற மத சகோதரர். சண்முகம் அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் பற்றி எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம்,  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பொதுக்கூட்டம் குறித்து 10 போஸ்டர்கள் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 21.11.14 அன்று திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம்   குறித்த 10 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

60 உணர்வு பேப்பர்கள் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 21/11/14 அன்று  உணர்வு வார பத்திரிக்கை 60 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நிகழ்ச்சி குறித்து 5 போஸ்டர்கள் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-11-14 அன்று மங்கலத்தில் நடைபெறவுள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" குறித்து 5 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 21-11-14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ஜஹராமா அவர்கள் "தொலைக்காட்சியில் மூழ்கிய பெண்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு ரூ.4100 நிதியுதவி - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 21.11.14 அன்று ஜுமுஆ வசூல் ரூ.4100 கோவையில் நடைபெறவிருக்கும் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக கோவை மாவட்ட துணைச் செயலாளர் சகோ. ஷஃபி அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

50 நோட்டிஸ்கள் விநியோகம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 21.11.14 அன்று தாராபுரத்தில் நடைபெறவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து 50 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...