Monday, 1 April 2013

"ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய கடமைகள் " _தாராபுரம் கிளை பெண்களுக்கான தர்பியா _31032013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்  31.03.2013அன்று தாராபுரம் கிளையில் பெண்களுக்கான நல்ஒழுக்கபயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரி.குர்சித் பானு ஆலிமா  அவர்கள் "ஜனாஸாவுக்கு  செய்ய வேண்டிய கடமைகள் " எனும் தலைப்பில் இறந்தவர்க்கு பெண்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை இஸ்லாமிய அடிப்படையான குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்" _மங்கலம் கிளைபெண்கள் பயான் _01042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 01-04-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா "சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்" என்ற தலைப்பிலும், சகோதரி தஸ்லீமா "பொய்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


திருப்பூரில் இஸ்லாத்தைஏற்ற சகோதரி.துர்கா ...சல்மா.. .வாக _29032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  சகோதரி.துர்கா என்பவர் 29.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை சல்மா என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மாவட்டநிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

தீமைகளைதவிர்ப்போம் _பெரியகடைவீதி கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம் -31032013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியகடைவீதி  கிளை சார்பாக 31.03.2013 அன்று திருப்பூர் நொய்யல் வீதி பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் "இறை நம்பிக்கையும்,மூட நம்பிக்கையும்" எனும் தலைப்பிலும்
சகோ.அஹமது கபீர் அவர்கள் "தீமைகளைதவிர்ப்போம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
 

அல்ஹம்துலில்லாஹ்