திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-12-14 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மலக்குமார்களின் பணிகள் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-11-2014 அன்று கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட முபஷ்ஷரீன் என்கிற 9 வயது சிறுமியின் சிகிச்சைக்காக 5650 ரூபாய் ஜூம்மாவிற்குப் பின் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-12-2014 அன்று ஒரு குழந்தையின் உடல் நலம் சரியில்லாத நிலையில் தவ்ஹீத் மர்க்கஸை நோக்கி தாயத்து கட்ட வந்த முஸ்லிமல்லாத குடும்பத்திற்கு தாயத்து அணிவது கூடாது என்பது குறித்து விளக்கப்பட்டது . மேலும் இஸ்லாமிய கொள்கை பற்றியும் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 02.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் சமூக சீர்கேடுகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 30.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கள் ஸஃபர் மாதம் பீடை மாதம் அல்ல எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 2-12-2014 அன்று சகோ : அன்சர் கான் மறுமைக்காக வாழ்வோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 02.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் எதிரிகளின் அழிவு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் முன்னறிவிப்பு குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..