Monday, 18 November 2019

பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா


           



  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 17/11/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

            சகோதரி. ரஹ்மத் (பல்லடம்) அவர்களும், சகோதரி.சுமையா (மங்களம்) அவர்களும் பெண் பேச்சாளர்களுக்கு
அவசியமான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.

           
  பேச்சாளர்கள் தமது தாவா பணிகளை சிறப்பசெய்ய உதவும் வகையில் மார்க்க விளக்க புத்தகங்கள்  மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி


              தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  17/11/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட அனைத்து கிளை மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி   ஒருங்கிணைப்பு    நிகழ்ச்சி நடைபெற்றது.



      மாநில செயலாளர் சகோதரர்.T.A.அப்பாஸ் மற்றும் மாணவரணி செயலாளர் பயாஸ் அவர்களும் கலந்து கொண்டு அணிகள் மூலம் எவ்வாறெல்லாம் சமூக சேவைப்பணிகள் செய்யலாம் என்பதை விளக்கி ஆர்வமூட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்