Sunday, 26 August 2018

இலவச புக்ஸ்டால் _ காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 26.08.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை களில் இலவச புக்ஸ்டால் அமைத்து பிறமத மக்களுக்கு இஸ்லாம் பற்றிய விளக்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு _SVகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   26/08/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அழைப்புப்பணியின் அவசியம் _பெரியதோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியதோட்டம் கிளையின் சார்பா 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிமுதல் மதியம் 3:00 மணிவரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர். அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் அழைப்புப்பணியின் அவசியம் எனும் தலைப்பிலும், சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் சமுதாயப்பணிகள் என்ற தலைப்பிலும், சகோ ஷேக்பரீத் அவர்கள் கொள்கைக்காக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் தர்பியா நடத்தினார்கள்.
இதில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

காங்கயம் கிளை ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

காங்கயம் கிளை சார்பாக 22/08/2018 அன்று 

நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜுப்பெருநாள் 

தொழுகை நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் 

சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மங்கலம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை  சார்பில் 22-8-2018அன்று ஹஜ் பெருநாள் தொழுகை பள்ளிவாசல் அருகே உள்ள திடலில் நடைபெற்றது.

அதில் 1000த்திற்கும்  அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். அபூபக்கர் சித்திக் ஷாதி உரை நிகழ்த்தினார்கள் 

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  22/ 08 /18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

 சகோ. ஜபருல்லா அவர்கள் "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

கேரள மக்களுக்கு நேரடியாக உதவிட 6ஆவது குழு _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 26-08-2018 அன்று கேரள மக்களுக்கு நேரடியாக உதவிட நிவாரண பொருள்களை விநியோகம் செய்திட 6ஆவது குழு அவினாசி கிளை நிர்வாகிகள் (சகோ: ஷாஜகான் மற்றும் சகோ: நவ்ஷாத்) மாவட்ட ஆம்புலன்ஸில் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்