Friday, 19 July 2013

இஸ்லாத்தின் தனி சிறப்புகள்_ உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொள்கின்றனர்.

தினசரி இரவுத்தொழுகை க்கு பின் பயான்
 16.07.2013 அன்று  "இஸ்லாத்தின் தனி சிறப்புகள் " எனும் தலைப்பிலும், 17.07.2013 அன்று  "நபி வழி தொழுகை "எனும் தலைப்பிலும், 18.07.2013அன்று "பாவமன்னிப்பு" எனும் தலைப்பிலும், சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

சிறுமியர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் 19.07.2013 அன்று ரூ.2,750/=TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுமியர் இல்ல  செலவினங்களுக்காக சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி வசம்  உடுமலை  கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல திற்காக நிதியுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் 19.07.2013அன்று ரூ.10,000/=TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக
சகோ.கோவை சஹாப்தீன் வசம்  உடுமலை  கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

மடத்துக்குளம் விஜயகுமார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 18.07.2013 அன்று மடத்துக்குளம் பிறமத சகோதரர். விஜயகுமார் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _தாராபுரம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19.07.2013அன்று ரூ.2120/=ஐ  TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக
சகோ.சேக் பரீத் வசம்  வசம்  தாராபுரம் கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

"யூதர்களின் வரலாறு " திருப்பூர் மாவட்ட மார்க்க விளக்க தொடர் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. தொடர்ந்து மார்க்க விளக்க தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
15.07.2013 முதல் 18.07.2013 வரை  தினசரி இரவு தொழுகைக்கு பின்  "யூதர்களின் வரலாறு " எனும் தலைப்பில் சகோ.பக்கீர்முஹம்மது அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.