Monday, 1 December 2014

மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-11-2014 அன்று மதரஸா மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களிடம் கேள்வி கேட்டார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-11-2014 அன்று மாணவர் அணியில் இருக்கும் சகோதரர்கள் கலந்து கொண்டு கிளையின் வருங்கால தாவா குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 30.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக பெண்கள் பயான்...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 30.11.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ஆஃபிதா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக தர்பியா...

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 30.11.2014 அன்று உடுமலை மஸ்ஜிதுத் தக்வா வில் தர்பியா(எ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில், சகோதரர் அன்ஸர் கான். M.I.Sc., அவர்கள் "ஏகத்துவம்"  எனும் தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக விசிடிங்கார்டு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-11-14 அன்று குர்ஆன் வசனம் அடங்கிய 1000 விசிட்டிங் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நவம்பர் முழுவதும் மாத, வார இதழ்களின் விற்பனை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ஜும்ஆவிற்குப் பிறகு உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில், நவம்பர் மாதம் முழுவது மொத்தம் 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 5 ஏகத்துவம் மாத இதழ்களும் 5 தீன்குலப் பெண்மணி மாத இதழ்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்...




பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்..

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 25.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. யாஸர் அவர்கள் மனித நேயம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 22.11.14 அன்று சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்து அவர்  கையில் கட்டியிருந்த தாயத்து கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பல்லடம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 24.11.14 அன்று சகோதரர் ஒருவருக்கு மாமனிதர், மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய மூன்று புத்தகங்கள் கொடுத்து தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....



20 உணர்வு பேப்பர்கள் விற்பனை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 31.10.14 அன்று ஜுமுஆவிற்குப் பிறகு 20 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.8556 மருத்துவ உதவி - மாவட்டம் சார்பாக...

திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 28.11.14 அன்று இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் பவுஜியா எனும் சகோதரிக்காக மருத்துவ உதவியாக ரூ.8556 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி ரூ.5000

திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 28.11.14 அன்று எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டிருக்கும் பாரிஜான் எனும் சகோதரிக்காக மருத்துவ உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...