Monday, 3 March 2014
"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02.03.2014 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியது பயிற்சிக்கு வந்த சகோதரர்களுக்கு தாம் சிறந்த பணி செய்யப்போகிறோம் என்ற உத்வேகம் வழங்குவதாக இருந்தது...மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர்(மலேசியா) அவர்கள் பேச்சாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் மற்றும் பேச்சுக்கலையின் அடிப்படை அம்சங்களை தெளிவாக விளக்கி பயிற்சி வகுப்பை துவக்கினார்.....
இன்ஷா அல்லாஹ் இந்த பயிற்சி தொடர்ந்து பிரதி ஞாயிறு அன்று (10வாரம்) நடைபெறும்...
"தொழுகையின் அவசியம்" _M.S.நகர் கிளை தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 02.03.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.சகோதரர் முஹம்மதுசலீம் அவர்கள் "தொழுகையின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்...
ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்
திருப்பித்தரும்வானம் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 01.03.2014 அன்று சகோ. சிராஜ்தீன் அவர்கள் "149.திருப்பித்தரும்வானம் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Comments (Atom)
















