Sunday, 17 September 2017

மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து ஆர்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்

மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து – தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  சார்பில் ஆர்பாட்டம்

திருப்பூர்  செப் 15 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக  மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும்  மத்திய  மோடி அரசு  ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை திறுப்பி அனுப்பும் முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .


மியான்மரிலுள்ள ராகின் மஹானத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை ராணுவமும் புத்த மதவாதிகளும் கூட்டுச்சேர்ந்து ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுகிறார்கள்.

 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அங் சாங் சுகி என்ற பெண்ணின் தலைமையில் நடைபெறும் அரசில் இன அழிப்பு படுகொலைகள் நடத்தப்படுகின்றன.

 மேலும் 
சர்வதேச அகதிக்கான அடையாள அட்டையுடன்  இந்தியாவில்  40 ஆயிரம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர்

 ஆனால் இந்திய அரசு முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் பொருளாதாரத்தை காரணம் காட்டி மியான்மருக்கு திருப்பி அனுப்ப போவதாக    முடிவு செய்துள்ளதையும் கைவிட 
 வலியுறுத்தி
  திருப்பூர்  மாவட்டம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, திருப்பூர் மாநகராட்சி  அருகில்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட  தலைவர் அப்துர்ரஹ்மான்  தலைமை தாங்கினார்
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் முஹம்மது யூசுப்  அவர்கள் கண்டன உரையாற்றினார்

இதில் மியான்மார்  அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரும்திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு மியான்மர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

 இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொண்டரனி செயலாளர் இர்ஷாத் தலைமையில் மாவட்ட தொண்டரனி சகோதரர்கள் சிறப்பாக எற்பாடு செய்தார்கள் .

  இறுதியாக மாவட்ட பொருளாளர் ஷேக் ஜெய்லானி  நன்றிகூறினார்.

அல்ஹம்துலில்லாஹ்!






அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்16-09-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -147-151- வாசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 16-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 17-09-2017 அன்று நடைபெறும் பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி சம்பந்தமாக போர்டில் விளம்பரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் ,ஏகத்துவம் மாத இதழ் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 15-09-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35, ஏகத்துவம் மாத இதழ் 10 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் நிகழ்ச்சி DTP ஜெராக்ஸ் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-09-2017 அன்று நடைபெறும் பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் நிகழ்ச்சி டி டி பி நோட்டீஸ் 100 ஜும்ஆ வுக்கு பிறகு விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-09-2017 அன்று நடைபெறவிருக்கும்பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி சம்பந்தமான போஸ்டர் கோம்பைதோட்டம் கிளைக்கு ஐந்தும் வெங்கடேஸ்வரா நகர் கிளைக்கு ஐந்தும் கொடுக்கப்பட்டது கிளை சார்பாக 30 போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர்,ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 14-09-2017 அன்று உணர்வு போஸ்டர் 14 மற்றும் ஏகத்துவம் போஸ்டர் ஐந்தும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு வார இதழ் விநியோகம் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 15-09-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 70  விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 15-9-2017 அன்று ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் பெற்றது .மாவட்ட துணைச்செயலாளர் பஷீர் அலி அவர்கள் "போராட்டக்களம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/09/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோ.கங்கா அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள்??? புத்தகம் ஒன்று பொது சிவில் சட்டம் புத்தகம் ஒன்று ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ஏகத்துவம் புத்தகம் விநியோகம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 15/09/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு இந்த மாதம் ஏகத்துவம் புத்தகம் 10- பத்து விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 15/09/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100 நூறு விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 14/09/17 அன்று ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக கரும்பலகை மூலமாக அறிவுப்பு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 15/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில் 15-09-2017 அன்று உணர்வு இதழ்  25  விற்பனை செய்யப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்

கல்வி உதவி ஆன்லைன் பதிவு முகாம் கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் கல்வி உதவி ஆன்லைன் பதிவு முகாம் ஆகிய  நிகழ்ச்சிக்கு கருபலகையில் அழைப்பு மற்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.....


''கண்டன ஆர்பாட்டம்'' போஸ்டர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், m.s.நகர்  கிளையின் சார்பாக 14-09-17 அன்று''கண்டன ஆர்பாட்டம்'' போஸ்டர்கள் 50  பு‌திய பேருந்து நிலையம்,மற்றும்*m.s.நகர் சுற்றியுள்ள

பகுதி்களில் ஒட்டப்பட்டது.       அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 14-09-2017 அன்று இரவு 10 மணிக்கு பொது மசூரா நடைபெற்றது இதில் 17-09-2017 அன்று கிளையில் நடைபெறவிருக்கும் பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி சம்பந்தமாக ஆலோசனை மற்றும் செய்ய வேண்டிய பணிகளுக்கான பொறுப்புகள் பிரிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 14-09-2017 அன்று வாராந்திர போது மசூரா வியாழன் இரவு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா + கண்டன போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 12-09-2017 அன்று கரும்பலகை  தாவா  செய்யப்பட்டது,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 14-09-2017 அன்று  வெங்கடேஸ்வரா நகர்   பகுதியில்  கண்டன போஸ்டர்   ,அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்களின் ஆற்றல்கள் குறித்து) * ஜின் களை மனிதன் கட்டுபடுத்த முடியாது *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளையின் சார்பாக 15.09.2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு  அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது.சகோ.ஷேக் ஜீலானி அவர்கள் நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற புத்தகத்திலிருந்து  மாற்றாரின் வாதம் என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்லாஹ்வின் அருளால் புத்தகத்திலிலுள்ள அனைத்து தலைப்புகளும் படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பட்டம் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/09/2017 அன்று செப் '15 வெள்ளி கிழமை நடைபெற இருக்கும் மியான்மர் அரசை கன்டித்து நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பட்டம் போஸ்டர் 30 nos ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்            

           

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /14/09/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் தவ்ஃபீக் பிலால் அவர்கள் (மார்கம் அனுமத்தை புனித போர் குறித்து) விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலைக தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /14/09/2017 அன்று செப் '15 வெள்ளி கிழமை நடைபெற இருக்கும் மியான்மர்  அரசை கண்டித்து நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலைக தாஃவா எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-15-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது- சூரா அல்பகரா-145-146- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன போஸ்டர் - ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக 14-09-2017 அன்று ஆர் எஸ் மற்றும் ஊத்துக்குளி டவுன் பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹ்மதுலில்லாஹ்


பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 14/9/2017அன்று காலை11:00க்கு பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி சுமையா நரகவேதனை பற்றி உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 13/9/17 அன்று 5 மற்றும் 6 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்கு இரவு சரியான முறையில் எரிவதில்லை இதனால் குழந்தைகளும்,பெண்களும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் அச்சபடுவதால் TNTJ தாராபுரம்கிளை சார்பாக நாகராட்சி புகார் மனு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

.

     

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14/09/17 இன்று மஹ்ரிபுக்கு பிறகு (ஆடியோ பயான்) தெருமுனைப்பிரச்சாரம்  நடைப்பெற்றது.தலைப்பு: ரோஹிங்கியா முஸ்லிம்கள்,இடம்: ஜவுளிக்கடை வீதி (சுல்தானியா பள்ளி அருகில்.),உரை:ரஸ்மின் (ஸ்ரீலங்கா),அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
2.திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 14/09/17 இன்று அஸருக்கு பிறகு (ஆடியோ பயான்) தெருமுனைப்பிரச்சாரம்  நடைப்பெற்றது.
தலைப்பு: ரோஹிங்கியா முஸ்லிம்கள்,இடம்: ஈமான் நகர்.உரை: 
ரஸ்மின் (ஸ்ரீலங்கா),அல்ஹம்துலில்லாஹ்!

TNTJ TIRUPUR மியான்மர் அரசை கண்டித்து ஆர்பாட்டம்

ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் பிளக்ஸ் பேனர் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 14-09-2017 அன்று சிறுபாண்மையின  மாணவ மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன;இரண்டு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது அவை பள்ளியின் அருகில் ஒன்று மற்றும் பாலாமுருகன் பள்ளியின்அருகில் ஒன்று வைக்கப்பட்டது........ அல்ஹம்துலில்லாஹ்        

              

உணர்வு வார இதழ் போஸ்டர் - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 14/09/17 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு உணர்வு வார இதழ் போஸ்டர்கள் 15/ ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/09/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்கள் தொழுகையின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஹவ்சிங் யூனிட் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளையில் 11.09.2017 அன்று மாவட்ட துணை செயலாளர் சகோ.ஷேக் ஃபரீத் அவர்களின் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது. அதில் கிளையின் தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

கண்டண ஆர்ப்பாட்டம் போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் போஸ்டர்  12-9-2017 செவ்வாய்கிழமை இரவு மக்கள் அதிகமாக கூடிகின்ற இடத்தில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்