Thursday, 24 October 2013

பிற மத சகோதரி. தனலட்சுமிக்கு புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 24.10.2013 அன்று பிற மத சகோதரி. தனலட்சுமிக்கு தாவா செய்யப்பட்டு மனிதருக்கு ஏற்ற மார்க்கம், மாநபி நபிகள் நாயகம் ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

பா.ஜ.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா?



பா.ஜ.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா?

ரியாதிலிருந்து பொதுச்செயலாளர்

ரஹ்மத்துல்லாஹ் அறிக்கை.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல.

பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.
பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தது, பொது சிவில் சட்டம், முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போடுதல் உள்ளிட்ட கொடுஞ்செயல்களைச் செய்துள்ள பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளித்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டோம் என்பது தான் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தாகும்.

ஏற்காடு இடைத்தேர்தலில் கலைஞர் எங்களின் இயக்கத்தின் ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதிய போது பா.ஜ.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கும் திமுகவை ஆதரிப்பதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்கள் பதில் அளித்தோம்.



பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டுவோரையே ஆதரிக்காத எங்கள் ஜமாஅத் எந்தக்காலத்திலும் பா.ஜ.க.வை ஆதரிக்காது. இது எங்கள் பல்வேறு செயற்குழு, பொதுக்குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

- இப்படிக்கு,

ரியாதிலிருந்து பொதுச்செயலாளர்
ரஹ்மத்துல்லாஹ்
 பா.ஜ.க.விற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா? - video

ரியாதிலிருந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் விளக்க வீடியோ


குறிப்பு : இது குறித்து சத்தியம் டிவியில் இன்ஷா அல்லாஹ் இன்று 24.1.2013 இரவு 8மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாநில துணைப்பொதுச் செயலாளர் அம்பத்தூர் யூசுப் அவர்கள் விளக்கமளிக்க உள்ளார்.

குர்பானி நிதி மூலம் ஏழை சகோதரிக்கு ரூ.2200/=வாழ்வாதார உதவி -மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 23.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீத பணம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த நபிஷா என்ற ஏழை சகோதரிக்கு ரூ.2200/=வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _உடுமலை கிளை















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 20.10.2013 அன்று உடுமலை பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

வீண் விரயம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 24.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் வீண் விரயம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"வீண்விரயம் " பெரிய தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை  சார்பாக 23.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

புதிய மக்தப் மதரஸா -உடுமலை கிளை

 
 
TNTJ திருப்பூர்மாவட்டம், உடுமலை  கிளையில் ஆண்களுக்கான புதிய மக்தப் மதரஸா 20.10.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
சகோதரர்.ஷபீக்இர்பான் அவர்கள் பாடம் நடத்த   தினசரி பஜ்ர்தொழுகைக்கு பின் ஆண்களுக்கான மக்தப் மதரஸா நடைபெறுகிறது...
சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோரை பேணுவோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 23.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.சிராஜ் பாய்அவர்கள் “பெற்றோரை பேணுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.