Monday, 10 September 2012
தபால் துறையில் வேலைவாய்ப்பு
தமிழக தபால் வட்டத்தில், தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தமிழக தபால்வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி உள்ள தேர்வர்கள்இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில், நேரடியாகவோ அல்லது," www.indiapost.gov.in, www.tamilnadupost.nic.in' ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணமாக, 50 ரூபாயும், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மேலும் எஸ்.சி., எஸ்.டி., மகளிர்,ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்கு, தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல்,பணம் செலுத்தியதற்கான ரசீதை, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள, ஏழு இலக்க எண்ணை, ரசீதின் பின்புறம் குறிப்பிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2012 முதல்25.09.2012 வரை விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் : 01.10.2012
விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
'Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110001'
குறிப்பு : விண்ணப்பங்களை Speed Post/ Register Post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு
http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm
பார்வையிடவும்.
POSTED BY மாணவரணி SHAHID
Subscribe to:
Posts (Atom)