Monday, 1 June 2015

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 31.05.2015  அன்று திருப்பூர் ரோஜா மஹாலில்  மாநில பொதுச்செயலாளர் சகோ.முஹம்மது யூசுப் தலைமையில், மாநிலச் செயலாளர் சகோ.E.முஹம்மது  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 



மாநிலச் செயலாளர்.E.முஹம்மது அவர்கள் "நமது இலக்கு" எனும் தலைப்பில் நமது நோக்கமும் செயல்பாடும், எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.. 





மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்..

மாவட்ட துணைச்செயலாளர் சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்..


மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா அவர்கள் மருத்துவ சேவை செயல்பாடுகளை விவரித்தார்..



தொடர்ந்து மாநில நிர்வாகம், கிளை நிர்வாகிகள் மற்றும்  பிரச்சாரகர்களிடம் இந்த மாவட்ட நிர்வாகக்குழு பற்றிய குறை நிறைகளை கேட்டனர்.. 

அவர்கள் குறிப்பிட்ட குறை நிறைகளுக்கு மாவட்ட தலைவர். சகோ.M.நூர்தீன், மாவட்டசெயலாளர் சகோ.ஜாகீர் அப்பாஸ், மற்றும்  மாவட்டப்பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் உட்பட நிர்வாகிகள் விளக்கம் வழங்கினர்.. 





தொடர்ந்து  புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது..

பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 

திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்

தலைவர்         :     S  அப்துல்லாஹ்  90035 33920

செயலாளர்    :      F.முஹம்மது ஹுசைன்  99447 78660

பொருளாளர் :      M .அப்துர்ரஹ்மான்     99430 06103

து.தலைவர்    :       M. முஹம்மது பிலால் 97877 70004

து.செயலாளர்கள்

1. M.அலாவுதீன் பாஷா  91503 00233

2. S.அப்துல் ரஷீத்       91505  90290

3. S.I.ஷேக் ஜீலானி       72005  70804 



இறுதியாக மாநில பொதுச்செயலாளர். முஹம்மது யூசுப் அவர்கள் "நிர்வாகம் செய்யும் முறைகளும், நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பொதுக்குழு வை இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தார்... 

அல்ஹம்துலில்லாஹ்....

சகோதரர். முகமது ஹைதர்(எ)நாகராஜ் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 31-05-15 அன்று சகோதரர். முகமது ஹைதர்(எ)நாகராஜ் க்கு  இஸ்லாமிய  மார்க்கம் குறித்து  தாவா செய்து அவருக்கு "மனனம்செய்வோம்,தொழுகை, துவாக்கள்" ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

பிறமதசகோதரர். சதீஸ்குமார் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-05-15 அன்று பிறமதசகோதரர். சதீஸ்குமார் க்கு இஸ்லாம் தீவிரவாத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்றும் இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்து அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்....?", மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

"வழிகடேர்களுக்கு நரகமே" _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "வழிகடேர்களுக்கு நரகமே "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"விமர்சணங்களை கண்டு அஞ்சாதீர்கள்" _பெரியகடைவீதி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 31.05.2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "விமர்சணங்களை கண்டு அஞ்சாதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்

ஜி.கே.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 31.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.சஜ்ஜாத் அவர்கள் (அத் 3:31) விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"பராஅத் ஒரு பித்அத்" _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 31/5/15 அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... சகோ: முகமது சுலைமான் "பராஅத் ஒரு பித்அத்" என்றால் என்ன என்பதை பற்றி சொல்லி விளக்கமளித்தார்.