Monday, 25 April 2011

குஜராத் படுகொலை : முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவதற்காக வெண்டுமென்றே அனுமதித்தார் மோடி! – மோடியின் ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட IAS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


மேலும் “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்று மோடி கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் வன்முறையாளர்களை தடுக்கக்கூடாது என மோடி உத்தரவிட்டார். அத்துடன் மக்கள் உணர்வுகளுக்கு அணை போட்டு தடுக்கக் கூடாது என்றார். எனவே நாங்கள் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என ஐ ஏ எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, அவர் மாநில ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார்.

பெண்கள் பயான் _ MS நகர் _24042011

திருப்பூர் TNTJ  MS நகர் கிளை சார்பாக நடைபெற்ற நிகழ்சிகள் பின்வருமாறு.

24.04.2011 அன்று  கலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.

24.04.2011 அன்று மாலை 7.00 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது...