Sunday, 12 April 2015

ஒடுக்கப்பட்டோருக்காகப்பாடுபடுதல் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 12/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சிராஜுதீன் அவர்கள் 181. ஒடுக்கப்பட் டோருக்காகப் பாடுபடுதல் எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது

" மண்ணு சல்வா "_திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 12.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " மண்ணு சல்வா " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர்மாவட்ட தொண்டரணி செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூர்மாவட்டம் சார்பாக  12.04.2015 அன்று தொண்டரணி செயல்வீரர்கள் கூட்டம்  மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.

மாவட்ட தொண்டரணி செயலாளர்.யாசர் அராபாத் தலைமையில்,
 மாவட்ட செயலாளர். ஜாகிர் அப்பாஸ், மாவட்ட மருத்துவரணி செயலாளர்.அன்வர்பாஷா மற்றும் கிளை தொண்டரணி சகோதரர்கள் கலந்து கொண்டனர்.   
 


மாநில செயலாளர். ஆவடி இப்ராகிம் அவர்கள் மாநில பொதுகுழுவில் தொண்டரணியின் பங்கு  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தொழுகை _ அவினாசி கிளை பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம்  அவினாசி கிளை சார்பாக  12.04.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி. ரஹ்மத் நிஷா  அவர்கள் தொழுகை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இணைவைப்பு -தாராபுரம் நகர கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக
12-4-2015 அன்று "புது மஸ்ஜீத் தெரு"வில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் "தவ்பீக் (மங்களம்)" அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மது ஒழிப்புப் பிரச்சாரம் _வாவிபாளையம் கிளை





திருப்பூர்மாவட்டம் வாவிபாளையம் கிளை  சார்பாக 12.04.2015 அன்று
மது ஒழிப்புப் பிரச்சாரம் காட்சிகளுடன் 
(1படையப்பா நகர் பள்ளி அருகில் 2 படையப்பா நகர் 3 செரங்காடு நகர் 4 குருவாயூரப்பர் நகர் 5 கணக்கம் பாளையம் 6 கணக்கம் பாளையம் பிரிவு 7பெருமாநல்லூர் பஸ்டான்ட் ஆகிய) 7 இடங்களில் நடைப்பெற்றது.  நிகழ்ச்சியில்  ஆயிரம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
மாவட்ட பேச்சாளர்கள்  சகோ.
  பஷீர் அலி, ராஜா,மற்றும்  ஜஃபருல்லாஹ் ஆகியோர் மதுவால் ஏற்படும் பாதிப்புகள், மதுவை தவிர்க்க இஸ்லாம் வழங்கும் போதனைகள் பற்றியும் தெளிவாக எடுத்து சொன்னார்கள் .. ஏராளமான பொதுமக்கள் இது அவசியமான நிகழ்ச்சி என கண்டு கருத்து தெரிவித்தனர்

2இணைவைப்பு கயிறு அகற்றம் _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-04-15 அன்று  2சகோதரர்களிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து அவர்களிடமிருந்து 2இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது.

96 பிறமத சகோதர்ர்களுக்கு தனிநபர் தாவா புத்தகங்கள் _MS நகர் கிளை
















திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 12-04-15 அன்று 96 பிறமத சகோதர்ர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 20 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 11 புத்தகங்கள் , இலவசமாக வழங்கப்பட்டது

புகழ்அனைத்தும் இறைவனுக்கே _ தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 12-4-2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள்  புகழ்அனைத்தும் இறைவனு
க்கே என்பதற்கு (அத்தியாயம் 1:1வசனம்) விளக்கமளித்தார்கள்

" மறுமை சிந்தனை " _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 12.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோதரர் யாஸர் அவர்கள் " மறுமை சிந்தனை " எனும் தலைப்பில் உரையாற்றினார். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நீர்மோர் பந்தல் _காலேஜ்ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பில் 12/4/15 அன்று  மர்கஸின் முன்பு நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தண்ணீர் விநியோகம் இன்ஷாஅல்லாஹ் வரும் 19/4/15 வரை செய்யப்படுகிறது .. கோடை காலத்தில் சிரமப்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தல்அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

பள்ளிவாசலின் தன்மைகள் _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை 12/4/15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு
குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. 
சகோ.S.M.ஆஸம். M.I.S.c., அவர்கள்  "பள்ளிவாசலின் தன்மைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்

"மார்க்கத்தின் தேட்டம் " _பெரியகடைவீதி கிளை மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 12-04-2015 அன்று காலை 7 மணிக்கு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர் அவர்கள் "மார்க்கத்தின் தேட்டம் " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்

அமானிதத்தை ஏற்றுக் கொண்ட மனிதன் _காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக 12.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   கிளைமர்கஸில் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "அமானிதத்தை ஏற்றுக் கொண்ட மனிதன் 33:72" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

نَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ ۖ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا 72. வானங்களுக்கும், பூமிக்கும் மலைகளுக்கும் அமானிதத்தை446 நாம் முன்வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 33:72

" நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு "_வடுகன்காளிபாளையம் கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 11-4-2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது சகோ. அமானுல்லாஹ் அவர்கள் " நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு " என்ற தலைப்பில் உரையாற்றி பயிற்சி வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

கல்வியின்அவசியமும், வீணான தற்கொலையும் _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்



திருப்பூர்மாவட்டம்   பெரிய தோட்டம் கிளை சார்பாக  10.04.2015 அன்று
  பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. A.குர்சித் பானு அவர்கள் கல்வியின்அவசியமும், வீணான தற்கொலையும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பயான் இறுதியில் கேள்விகள் கேட்டு பதில் அளித்த 3 நபர்களுக்கு ஏகத்துவம்,தீன்குலப் பெண்மணி புத்தகம் பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மனிதன் ஒரு அற்புதம் - G.K.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன்  கிளை சார்பாக  12/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.அப்துல் வஹாப் அவர்கள் மனிதன் ஒரு அற்புதம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்

வதந்தி பரப்பக் கூடாது _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 12/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.ஆசாத் அவர்கள் 124. வதந்தி பரப்பக் கூடாது எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது

3இணைவைப்பு கயிறு அகற்றம் _ பெரியதோட்டம் கிளை



திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை சார்பாக 11-04-15 அன்று 3சகோதரர்களிடம்   இணைவைப்பு குறித்த தாவா செய்து அவர்களிடமிருந்த தாயத்துடன் கூடிய  3இணைவைப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது

சூனியம் தொழில் செய்து வந்த ஆனந்த்க்கு தாஃவா _கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம் பைத் தோட்டம் கிளை  சார்பாக   10.04.15 அன்று சூனியம் தொழில் செய்து வந்த ஆனந்த் என்ற சகோதரருக்கு சூனியம் என்பது ஏமாற்று வேலை என்று கூறி தாஃவா செய்யப்பட்டது. மனம் திருந்தி மன்னிப்பு கேட்டார். மனிதனுக்கேற்ற மார்க்கம் என்கிற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது