Monday, 6 November 2017
டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் பொது மக்களுக்கு வினியோகம் - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 29-10-2017 ஞாயிற்றுகிழமை காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது
1.செல்லாண்டியம்மன் துரை
2.மிஷின் வீதி
3.பெரியகடைவீதி
4.டூம்லைட்
ஆகிய இடங்களில்
சகோதரர்கள்
1.ஷேக் ஃபரீது M I S C
2.அஜ்மீர் அப்துல்லாஹ்
3.பஷீர்
4.ராஜா
ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள் மற்றும் சகோ PJ அவர்கள் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக பேசிய ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 27-10-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 40 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
நிலவேம்பு கசாயம் வினியோகம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று நிலவேம்பு கசாயம் 5 மற்றும் 6 வது வார்டு வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது. இதில் 700க்கும் மேற்பட்டோர்கள் வாங்கி பயண்பெற்றனர். மற்றும் சகோதரர் பீஜே அவர்கள் டெங்கு சம்பந்தமாக பேசிய விழிபுணர்வு ஆடியோ 15 மோற்பட்ட இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்
தாராபுரம் கிளை
மருத்துவ அணி
9150518586
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/10/2017/ அன்று அஸர் தொழுகைக்குபின் பூமலூர் பகுதியில் இஸ்லாம் சம்பந்தமான உரையாற்றி பிறகு கொள்கை சம்பதமான கேள்விகளுக்கு மாவட்ட தலைவர் . சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் பதில் உரையாற்றினார் இந்த நிகழ்சியில் 30 முப்பது திற்கும் மேற்ப்பட்ட சகோதர.சகோதரிகள் கலந்து கொண்டனர்,( அல்ஹம்துலில்லாஹ்)
உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 29-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பேக்கரி, சங்கம், மாற்று மத சகோதரர்கள் உட்பட 25 இடங்களில் உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............
பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான்நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
இடம்: கிளை மர்கஸ்
தலைப்பு : இறையச்சம்
உரை : சகோதரி. தஸ்லிமா பானு
இதில் கலந்து கொண்ட சகோதரிகளிடம் பேசப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை
1. சிந்தனை துளிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கேயம் கிளை சார்பாக
1. வாழ்க்கையை பரீட்சை என்பது ஏன்?
2. ஏன் கடவுள் நம்மை சோதிக்க வேண்டும்?
3. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வசதியாக இருப்பது ஏன்?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று (01.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கேயம் கிளையின் சார்பாக. 01/11/17 புதன் இரவு 7 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் தலைப்பு ;; வட்டி நோக்கி தள்ளும் ஆடம்பரம்.
உரை..சகோ. ராஜா இடம் முஸ்லீம் வீதி பழைய தவ்ஹீத் மர்கஸ் அருகில் காங்கேயம்.
பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை
1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-10-2017 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுமத சகோதரர். குமார் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-11-2017 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த மாற்றுமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் .தீவிரவாதிகள் என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செரங்காடு கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 29.10.2017 அன்று காலை 09:00மணி முதல் 1)செரங்காடு சுன்னத் பள்ளி வீதி,2)சுப்பிரமணியம் நகர் புதுக்காடு, 3)மல்லிகா ஸ்டோர்பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில் கிட்டதட்ட 1200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.இந்நிகழ்வில் மதரஸா மாணவர்களும் கலந்து கொண்டு சமுதாய பணியாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்!!!!!
தெருமுனை கூட்டம் போஸ்டர்,நோட்டீஸ் வினியோகம் -இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/10/2017/ அன்று இன்ஷா அல்லாஹ் எதிர் வருகிற நவம்பர் 05 தேதி ஞாயிற்று கிழமை அன்று கிளையின் சார்பாக நடைபெற இருக்கும்
தெருமுனை கூட்டம் சம்பந்தமாக .
போஸ்டர். 200 nos
நோட்டீஸ்.1000.nos
அடிக்கப்பட்டு அருகில் உள்ள அனைத்து
கிளை களுக்கும் அழைப்பு கொடுத்து .
போஸ்டர்.150 nos
நோட்டீஸ்500 nos
வினியோகம் செய்யப்பட்டது
(அல்ஹம்துலில்லாஹ்)
பெண்கள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று 05.30 மணிக்கு பெண்கள் பயான் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
இடம்: கிளை மர்கஸ்
தலைப்பு : மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவோம்
உரை : சகோதரி. பௌசியா
இதில் கலந்து கொண்ட சகோதரிகளிடம் பேசப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)