Saturday, 6 July 2019

திருப்பூர் மாவட்ட மஸ்வரா 05/07/2019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மஸ்வரா 05/07/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 7:00 மணி முதல் 10:30 வரை நடைபெற்றது.

இதில் இன்று நடந்து முடிந்த கண்டன ஆர்ப்பாட்ட குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு இம்மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதரஸாக்களை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை நிகழ்ச்சி நடத்தவும்,
மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய சில கிளை சந்திப்புகள் நடத்தவும்,
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு  முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

காதர் பேட்டை கிளை சந்திப்பு 5-7-2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக காதர் பேட்டை கிளை சந்திப்பு   5-7-2019 அன்று ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
    
இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ்,  மங்கலம் யாசர் அராபத்  கலந்து கொண்டு,

  கிளையின் தாவா செயல்பாடுகள் கேட்டறிந்து வருங்கால தாவா மற்றும் சமுதாய சேவைகளை வீரியமாக செயல்படுத்த  பல்வேறு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  

பல்லடம் கிளை சந்திப்பு 05/07/2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05/07/2019 அன்று பல்லடம் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல்ரஷீத் அவர்கள் கலந்து கொண்டு கிளை நிர்வாக தாவா பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

மேலும் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

ஜார்கண்ட்டில் தப்ரேஸ் அன்சாரி அடித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05/07/2019  வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி எதிரில்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்,மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்,  மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், சேக் பரீத், அனிபா, மற்றும் மாபு பாஷா , மாவட்ட அணிச் செயலாளர்கள் உள்ளிட்ட  மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சகோதரர். ஜமால் உஸ்மானி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.


அதில், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்றும்,

 சொந்த நாட்டு குடிமக்கள் காட்டுமிராண்டிகளால் அடித்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள், 
உ.பி-யில் முஹம்மது அஹ்லாக் தொடங்கி ஜார்கண்ட் தப்ரேஸ் அன்சாரி வரை நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். என்பதையும் 

  சமீபத்தில் ஜெய் ஸ்ரீராம் கோசம் போடச்சொல்லி தப்ரேஸ் அன்சாரி உட்பட ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும்  11 முஸ்லிம்களை காவிகள் அடித்து படுகொலை செய்துள்ளனர் என்பதயும் விளக்கி 

    சட்ட ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும் ஜார்கண்ட் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

         இதில் தொடர்புடையவர்கள்,  இதன் பின்னணியில்
இருப்பவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி,

         குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.