Sunday, 27 January 2013

உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில்"இதுதான் இஸ்லாம்" _உடுமலை _012013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
உடுமலை கிளை சார்பில்  உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் (இரவு 9.00முதல் 10.00 வரை) 1மணி நேரம்  தூய இஸ்லாமிய மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்படுகிறது.
இதன்முலம் உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள அணைத்து சமுதாய மக்களும்  பயன் பெரும் வகையில் சத்தியத்தை கொண்டு செல்லப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்.

தர்கா போட்டோ அகற்றம் _தாவா _ M.S.நகர் _27012013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 27.01.2013அன்று
M.S.நகர் பகுதி வீடுகளில் இருந்த இணைவைப்பு பொருள்கள்
குறித்து தாவாசெய்து, தர்கா போட்டோ போன்றவை அகற்றப்பட்டது

"நபிவழி தொழுகைமுறை " தர்பியா _M.S.நகர் _27012013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 27.01.2013அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
"நபிவழி தொழுகைமுறை " தர்பியா , சகோ.அப்துல்லாஹ்M.I.SC.,அவர்கள் நடத்தினார்.
கலந்துகொண்ட சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்கினார்

பிறசமய சகோதரர்.சுந்தர் .அவர்களுக்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்கநூல் வழங்கி தஃவா _திருப்பூர் மாவட்டம் _26012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
26.01.2013 அன்று
இஸ்லாமிய அடிப்படையை அறிய விரும்பிய
திருப்பூரில் வசிக்கும் சேலம் மாவட்ட பிறசமய சகோதரர்.சுந்தர் .அவர்களுக்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்கநூல்
மற்றும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

கேள்வி- பதில்நிகழ்ச்சி _தாராபுரம் -25012013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  
கேள்வி- பதில்  நிகழ்ச்சி நடைபெற்றது.
25.01.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில்
சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது

மாணவர்களுக்கு தர்பியா _பெரிய தோட்டம் _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  27.01.2013அன்று  மதரஸா மாணவர்களுக்கு தர்பியா 
நிகழ்ச்சி யில் சகோதரர். பஷீர் அவர்கள் "பேய் பிசாசு உண்டா" என்ற தலைப்பில் உரையாற்றி,மாணவர்களின் மார்க்க சம்மந்தமாக கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.