Tuesday, 21 November 2017
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள் 1. குர்ஆன் இக்காலத்திற்கு பொருந்துமா?,
2. எத்தனையோ பழைய வேதங்கள் ஓலைச்சுவடிகள் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்தாத போது?
3. குர்ஆன் மாத்திரம் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்துமா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று (18.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
உணர்வு வார இதழ் விற்பனை - ஹவுசிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 17.11.2017 அன்று உணர்வு வார இதழ் 11 விற்பனை செய்யப்பட்டது. 4 இதழ் சுன்னத் ஜமாஅத் இமாம்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
நிதியுதவி - ஹவுசிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 17.11.2017 அன்று ஜூம்ஆ வசூல் 1555 ரூபாய் வடுகன்காளிபாளையம் கிளைக்கு மாவட்ட நிர்வாகியிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,கனவுகள் பற்றி குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் யூசுப் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கனவுகளை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்,
( அல்ஹம்துலில்லாஹ்)
நோட்டீஸ் தாவா - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17/11/2017 அன்று ஜூம்ஆவிற்குப் பிறகு செரங்காடு கிளையின் தெருமுனை கூட்டம் சம்பந்தப்பட்ட அறிவிப்பு நோட்டீஸ் 1)செரங்காடு கிளை பள்ளி 2)செரங்காடு சுன்னத் பள்ளி 3)தக்வா பள்ளி 4)காளியப்பா நகர் பள்ளிகளில் சுமார் 500 நபர்களுக்கு மேல் விநியோகித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக,
19/11/2017-அன்று இரவு 07:00 மணி முதல் 09:00 மணி வரை இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் செரங்காடு சுன்னத் பள்ளி வீதி
பகுதியில் நடைபெற்றது.
முன்னதாக மதரஸா மாணவர்களின் பேச்சுப் போட்டி 06:45-07:00 மணி வரை நடைபெற்றது. பின்பு
இஸ்லாத்தின் பார்வையில் மீலாதும்,மவ்லீதும்
என்ற தலைப்பில்,
சகோ: குல்ஜார் நுஃமான் அவர்களும்
வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சகோ: சதாம் உசேன் அவர்களும் உரையாற்றினார்கள்.
இறுதியாக சகோ பஷீர் அலி அவர்கள் தீர்மானம் வாசித்தார்கள்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!
குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 18-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் ஊசி துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 17-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் மனிதர்களின் அரசன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,கனவுகள் பற்றி குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் யூசுப் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கனவுகளை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)