Saturday, 29 August 2015
பெண்கள் பயான் - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "பெண்களின் நிலை அன்றும்,இன்றும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான் - VKP கிளை
திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 23-8-2015 அன்று வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமைய்யா அவர்கள் " மறுமை வெற்றிக்கு வழி " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
"'இரத்த தானம் "விழிப்புணர்வு பிரச்சாரம் - Ms நகர் கிளை சார்பாக
பிரச்சாரத்தின்"' தொடக்கமாக 23 பிறமத சகோரர்களுக்கு" இரத்ததானம் செய்வதின் நன்மைகள்,அவசியம் குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது "என்பது குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.....
பிறமத தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று மூன்று பிறமத சகோதர்ர்களுக்கு ""இரத்த தானம் குறித்தும் ,இஸ்லாம் மனிதனை கொலை செய்யாமல், மனிதனை வாழவைக்கச் சொல்லும் மார்க்கம்"" என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது... மேலும் அவர்களுக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....?" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)