Tuesday, 28 March 2017
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 21-03-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 29-39 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள்( அபுலஹப் .இஸ்லாத்தை ஏற்கமாட்டான் )என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
ஏப்ரல்16 "முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்)" மாவட்ட மாநாடு தாவா - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 19/03/17அன்று காலை மற்றும் மாலையில் சாதிக்பாஷா நகர் இரண்டு வீதிகளில் முஸ்லிம் மக்களை சந்தித்து ஏப்ரல்16 "முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்)" மாவட்ட மாநாடு குறித்து நோட்டீஸ் மற்றும் மாநாடு சிறப்பிதழ் தந்து அழைப்பு விடுக்கப்பட்டது.இதில் ஒருவருக்கு இணைவைத்தல் குறித்து தாஃவா செய்து அவரது கையில் கட்டியிருந்த இணைவைப்புக் கருப்புக்கயிறு அகற்றப்பட்டது.அல்ஹதுலில்லாஹ்...
தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை
Tntj திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 20-03-2017 அன்று இரவு 8:30 மணியளவில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாடு சம்மந்தமான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் மற்றும் சகோ ஷஃபியுல்லாஹ் அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 20-03-17 அன்று செல்வம் என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
பெண்கள் தாவா குழு அமைத்தல் மற்றும் பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை
Tntj திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில் 19-03-2017 அன்று பெண்களுக்கும் தாவா பணிகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சகோதரி சல்மா அவர்கள் தலைமையில் பெண்கள் தாவா குழு தொடங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-03-2017 அன்று மாலை 4:30 மணியளவில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்மந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (இறைத்தூதர் சொல்ல வந்தது என்ன) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..
பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (நற்பண்புகள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..போட்டோ எடுக்கவில்லை
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுப் போஸ்டர் -
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து சென்று 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹவ்சிங் யூனிட், நாச்சிப்பாளயம், புதுப்பாளயம், முதலிபாளயம் பிரிவு, சிட்கோ, குமார் நகர், செந்தில் நகர், வண்ணாந்தரை புதூர், படியூர், ஓட்டப்பாளயம், மானுர், தொட்டிப்பாளயம் ஆகிய 12 ஊர்களில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுப் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)