Tuesday, 15 January 2019

திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு _ இந்தியன் நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக சின்னவர் தோட்டம் ரோஸ் கார்டன் மதீனா நகர் இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு என்றும்,

மனித குல வழிகாட்டி திருக்குர்ஆனின் போதனைகளையும்,

இந்தியன் நகர் மதரஸா மாணவர்கள் ஆதம், ஹாரிஸ் மற்றும் இர்பான் ஆகியோர்
உரையாக நிகழ்த்தியது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.

அல்ஹம்துலில்லாஹ்

சின்னவர் தோட்டம் மதரஸா வில் பெண்கள் பயான் _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில். 

சகோதரி. சுமையா  அவர்கள் உரை நிகழ்த்தினார் 
இதில் அதிக மானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

சகோ. முத்து க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட சகோ. முத்து என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து   அர்த்தமுள்ள இஸ்லாம்  " என்ற  புத்தகமும் ஒன்றும், திருக்குர்ஆன் தமிழாக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கூடுதலாக இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, தாயத்து, தட்டு போன்ற இணைவைப்பு காரியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோ. ரவி க்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோ. ரவி என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,  மற்றும்  முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பிலும் அர்த்தமுள்ள  இஸ்லாம் என்ற தலைப்பிலும் புத்தகம் இரண்டு ம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் தெய்வேந்திரன் இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் _ S v காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v காலனி கிளை மர்கசிக்கு வந்திருந்த சகோதரர் தெய்வேந்திரன் அவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்து  கூடுதல் விளக்கம் பெற்று   இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் என தமது பெயரை மாற்றம் செய்து கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்

சகோ. சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11-1-19 வெள்ளிக்கிழமை அன்று கிளை மர்கசிக்கு வந்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. 
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்