Wednesday, 28 February 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/02/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்
மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் சிரியாவில் கடும்துயரமுற்ற நிலையில் வாடும் மக்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வோம் மேலும் குனூத்துன் நாஸிலா துஆ சட்டங்கள் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்
அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 23/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் கண்டாயி என்ற சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்ததானம் O +ve 1unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 26/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் குணசேகரன் என்ற சகோதரரின் டயாலிஸிஸ் சிகிச்சைக்கு அவசர இரத்ததானம் O +ve 1unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/02/2018/ அன்று அஸர் தொழுகைக்கு பின் கோல்டண் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் 35 நபர்களுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்கள்,சகோதரி. ஃபாஜிலா அவர்கள் அமானித்தை பேனுவோம் என்ற தலைப்பில் விளக்கம்மளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (26-02-2018, திங்கள்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இறந்தவர்களுக்காக மூன்றாம் ஜியாரத், ஏழாம் ஜியாரத், 40ஆம் நாள், வருஷ பாத்திஹா, யாஸீன் ஓதுதல் இஸ்லாத்தில் உண்டா?! என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.!
பேருந்துகளின் நேரங்கள் அடங்கிய கால அட்டவணை பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான தகவல் பலகை மற்றும் வடுகன்காளிபாளையம் பகுதிக்கு வந்துசெல்லும் பேருந்துகளின் நேரங்கள் அடங்கிய கால அட்டவணையை தயார் செய்து பஸ் ஸ்டாப் அருகே ப்ளெக்ஸாக வைக்கப்பட்டது .(ப்ளெக்ஸ் - 6×4 ) அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பிறர்பார்பதற்காக அமல்செய்யாமல் இறைவனின் திருபொருத்ததை எதிர்பார்த்து அமல் செய்யவோம் என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(25-02-2018) அன்று ஞாயிறு இரவு மஹ்ரிபுக்குப் பிறகு அரசமரப் பகுதியில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய இறைவன் எல்லாம் அறிந்தவன்.என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
ஒலிபெருக்கிபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (25-02-2018, ஞாயிறு) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் மக்களை மவ்லித் ஓதச் சொல்லி மறுமை வெற்றிக்கு வழி காட்டுகிறார்களா? அல்லது மக்களை மடையர்களாக்கி தம் வயிறுகளை வளர்க்கிறார்களா?என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!
Subscribe to:
Posts (Atom)