Saturday, 1 November 2014
காவல் அதிகாரிகளுக்கு திருக்குர்ஆன் - ஆண்டியக்கவுண்டனூர் கிளை
திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27.10.2014 அன்று குமரலிங்கம் காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர் சகோ.வெங்கிடுபதி அவர்களிடம் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி நாம் முன்னெடுத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
மங்கலம் கிளை சார்பாக மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-10-2014 அன்று இஷாவிற்குப் பின் தீவிர வாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்து மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோல்டன் டவர் , RP நகர் மாணவரணியினர் கலந்துகொண்டனர். இதில் சகோ : அன்சர் கான் அவர்கள் இப்பிரச்சாரத்தின் ஒழுங்குகள் குறித்து மாணவர்களுக்கு உரைநிகழ்த்தினார். அதை தொடர்ந்து மாவட்ட தொண்டரணி சகோ : யாசர் அரபாத் அவர்கள் இப்பிரச்சாரத்தின் அவசியத்தை குறித்து விளக்கமளித்தார். இதில் மூன்று கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் . இதில் 25 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் . அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)