Sunday, 13 January 2013

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை  (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
13.01.2013 அன்று   8 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

"பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் " _பெண்கள் பயான் _பல்லடம் _13.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 13.01.2013 அன்று மாலை பல்லடம் பள்ளிவாசலில்பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஜரினாஆலிமா  அவர்கள்"பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

சமூகசேவை _நல்லூர் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 13.01.2013 அன்று  நல்லூர்  பிரதான சாலைகளில் 

 8 வேக தடைகள்  உள்ளதை அறியவும், வேகத்தடைகளினால் விபத்து ஏற்படாமல் இருக்கவும்,  வெள்ளை கோடுகள் நல்லூர் கிளை சகோதரர்களால் போடப்பட்டது.

மக்களிடம் வசூல் செய்த பணத்தை மக்களிடமே திருப்பி வழங்கினர் _கோம்பை தோட்டம் _13.01.2013

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில்
ஜனவரி 10 "சிறை நிரப்பும் போராட்டதிற்கு"
மக்களிடம் வசூல் செய்த பணத்தை முழுவதும்,
போராட்டம் நடைபெற வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால் 
13.01.2013 அன்று கிளை நிர்வாகிகள் மக்களிடமே திருப்பி வழங்கினர்.

சிறுவனின் சதைசிதைவு நோய் சிகிச்சைக்காகமருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _11012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 11.01.2013 அன்று திருப்பூர் செல்லபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர். நிசார் அஹமது என்ற சிறுவனின் சதைசிதைவு நோய் சிகிச்சைக்காக  
ரூ.9300 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _12.01.2013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.01.2013 அன்று கோவை ஆத்துபாலம் பகுதியை சேர்ந்த சகோதரி. அன்சியாபர்வின்  அவர்களின் மூளை கட்டி அறுவை சிகிச்சைக்காக
ரூ.9300 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

சிவராஜ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம் "புத்தகம் வழங்கி தாவா _13012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 13.01.2013 அன்று திருப்பூர் நம்பியூர் பகுதி சகோதரர்.சிவராஜ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம் "புத்தகம் வழங்கி தாவாசெய்யப்பட்டது.
மேலும் திருச்சி சகோதரர்கள் இருவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.