திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.02.2015 அன்று கிருஷ்ணா நகர் பகுதியில் 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக United Arab Emirates (Sharjah) 1/3/2015 இஸ்லாமிய நபர்க்கு இணை வைத்தல் பெரும் பாவம் என்று விளக்கமளிக்கப்பட்டது. கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் நன்மையாக பதிவு செய்யப்படும் காலடிகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.02.2015 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் இஸ்லாமிய முறையில் பிராணிகளை அறுப்பது எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 1/3/2015. United Arab Emirates (Sharjah) பிறமதசகோதரர் ராஜ்குமார் (srilanka .hotal) அவர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் ,தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனி நபர் தாவா செய்தும் மனிதனுக்கேற்ற மார்க்கம் 1 புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 01.03.15 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்ட பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் மனிதநேயம்
போதிக்கும் மார்க்கம் என்றும் , இஸ்லாம் பற்றிய பல்வேறு சந்தேகளுக்கு
விளக்கம் வழங்கி இஸ்லாத்தினை அவர்கள் அறியும்வண்ணம் பல்வேறு புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது...
40 பிறமத மக்களுக்கும், 10 முஸ்லிம்களுக்கும்
4 - திருக்குர்ஆன் தமிழாக்கமும்,
128 - புத்தகங்களும்,
20 - டிவிடிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.03.2015 அன்று அன்னூர் பகுதியை சார்ந்த பிறமத சகோதரர்.L.குமார் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..? புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்