Saturday, 13 July 2013

ரமலான்நோன்பாளிகளுக்கும்,பொது மக்களுக்கும் கஞ்சி காய்ச்சி விநியோகம் _உடுமலைகிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் நோன்பாளிகளுக்கும்,பொது மக்களுக்கும் கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்யப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

மார்கத்திற்கு உதவிய நல்லோர்களின் மனைவியர்கள் _உடுமலைகிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 12.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "மார்கத்திற்கு உதவிய நல்லோர்களின் மனைவியர்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.07.2013அன்று   ரூ. 17,200/=ஐ  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக
சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி வசம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

ரமலான் மாத நோன்பு அட்டை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.07.2013 அன்று ரமலான் மாத நோன்பு அட்டை   2000 ஜும்மா விற்கு  பின் விநியோகம் செய்யப்பட்டது.
ஒவ்வோர் ஊரிலும் ரமலான் மாதத்தில் அல்லாஹுவின்தூதர் காட்டிய வழி முறைகளுக்கு மாற்றமான தகவல்களுடன் நோன்பு அட்டை விநியோகிப்பர் , அந்த தவறுகளை மக்கள் தெரிந்து நேரான வழியை எடுத்து சொல்லும் வகையில் திருப்பூர் மாவட்டம் சார்பில்
பஜ்ர் பாங்கு வரை உண்ணலாம்,பருகலாம் என்ற ஹதிஸ், நோன்பு திறப்பதை விறைவு படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் இருக்கின்றனர் என்ற ஹதிஸ் உட்பட பஜ்ர்,மக்ரிப்,நேர அட்டவணையுடன்
ரமலான் மாத நோன்பு குறித்து நபி (ஸல்) காட்டிய வழிமுறையை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த ரமலான் மாத நோன்பு அட்டை விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"ரமலான் ஓர் அறிமுகம் " காங்கயம்கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 12.07.2013 அன்று காங்கயம் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 12-07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பள்ளிவாசல் கட்டிட 5250 ரூபாய் நிதியுதவி _மங்களம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 12-07-2013 அன்று மதுரை மஹபுப்பாளையம் பள்ளிவாசல் கட்டிட 5250 ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

"நோன்பு தரும் படிப்பினை " பெரியகடைவீதி கிளை ரமலான் இரவுத்தொழுகை பயான்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 12.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில்

நடைபெற்றது.




பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.





தொழுகைக்குப்பின், "நோன்பு தரும் படிப்பினை   " எனும் தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
 

நபி வழி "தொழுகை முறை" _ப்ளக்ஸ் பேனர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக

12.07.2013 அன்று "தொழுகை முறை" என்ற தலைப்பில் நபி வழியில் தொழுகை முறைகளை ஹதீஸ் ஆதாரத்துடன் ப்ளக்ஸ் அடித்து மக்கள் படிக்கக்கூடிய வகையில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்