Tuesday, 5 August 2014

மரணம் குறித்து 50 ஸ்டிக்கர்கள் _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-08-14 அன்று மரணத்தை பற்றி சிந்திக்கும் விதமாக குர்ஆன் வசனம் அடங்கிய மிகப் பெரிய அளவிலான ஸ்டிக்கர், மொத்தம் 50 ஸ்டிக்கர்கள்  கடை மற்றும் வீடுகளில் ஒட்டப்பட்டன. இந்த ஸ்டிக்கரில் இருக்கும் இதே செய்தியை கொண்டு இதற்கு முன்பு பேனர்களும் வைக்கப்பட்டன. 

அல்ஹம்துலில்லாஹ்..


50 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 28.07.14 அன்று ஃபித்ரா பொருட்கள் 50 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தொழுகை முறை விளக்கும் போஸ்டர்கள் - ஆர்.பி.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 03.08.14 அன்று நபி மொழியில் தொழுகை முறையை விளக்கும் வகையில் விளக்கப் படங்களுடன் இருக்கும் போஸ்டர் மொத்தம் 50  போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..


மத்திய அரசை கண்டித்து 15 போஸ்டர்கள் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 04-08-14  அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக 15 பொது இடங்களில் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை _ தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக, 29-07-14 செவ்வாய் அன்று  தாராபுரத்தில் உள்ள "ஜின்னா மைதானம் திடலில்" நபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது. 









இதில் சகோ.தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அணைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்...