Saturday, 10 May 2014

பிறமத சகோதரியின் அவசர சிகிச்சை இரத்த தேவைக்கு இரத்ததானம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 10.05.2014  அன்று திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி. சுசிலா  அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை  சார்பில் கடந்த 10.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால  நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 
 


 
இதில் சகோதரர். தவ்பீக்  அவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
 35 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரிக்கு ரூ.550/= வாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 09.05.2014 அன்று   ஏழை சகோதரி. பாத்திமாபீபி  அவர்களின்  குடும்பத்திற்கு ரூ.550/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது

"பிரார்த்தனை" _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 09.05.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் "பிரார்த்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"பலதாரமணம் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 10.05.2014 அன்று சகோ.ஜாகிர் அவர்கள் "பலதாரமணம்_106" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரர் குடும்பத்திற்கு ரூ.1100/= வாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 08.05.2014 அன்று    ஏழை சகோதரர்.ஜான்பாஷா   அவர்களின்  குடும்பத்திற்கு ரூ.1100/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது

ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _கோம்பைத்தோட்டம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை  சார்பில் கடந்த 28.04.2014 முதல் 08.05.2014 அன்று வரைஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோ.ஆஷம், சகோ.சதாம் ஹுசைன், மற்றும் சகோ. ஹுசைன் ஆகியோர்   
1.இஸ்லாமிய அடிப்படை கல்வி
2.இஸ்லாமிய ஒழுக்கங்கள்
3.நபிவழி தொழுகை பயிற்சி 

4.துவாக்கள் மனனம்

5.சூராக்கள் மனனம்


 



ஆகிய பாடங்களை கலந்து கொண்ட 26 மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.
08.05.2014 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட இதர மாணவர்கள் அனைவர்களுக்கும் பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.


கலந்துகொண்ட  மாணவர்கள் அனைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்.... 









சாலையோர மரக்கன்றுகள் நட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் _யாசின் பாபு நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 08.05.2014 அன்று  சாலையோரங்களில் 32 மரக்கன்றுகள் நட்டி வைத்து மரம் நடுவதனால் ஏற்படும் இம்மை மறுமை நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது…….....அல்ஹம்துலில்லாஹ்