தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 3/3/2017 அன்று மாலை 7மணி முதல் 9 மணி வரை மாவட்ட மர்கஸில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில அழைப்பாளர். சகோ. கோவை அப்துர்ரஹீம் அவர்கள் மாநாட்டின் அவசியம் பற்றி விளக்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு செயல்திட்டங்கள், ஆலோசனைகள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!



