Thursday, 5 April 2018
பெண்கள் பயான் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 01/04/18 அன்று மாலை 07:00 மணிக்கு PAP நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "மார்க்க கல்வியின் அவசியம் " எனும் தலைப்பில் சகோதரி பெனாசிர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 01/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 157 லிருந்து 163 வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
இரவுத்தொழுகை :
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்
செரங்காடு கிளையில் 31/03/2018 அன்று பள்ளியில் இரவுத் தங்கி இரவுத் தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 4 April 2018
பெண்கள் பயான் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு Ms நகர் பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.சஜ்ஜாத் அவர்கள் ""அற்பமாக கருதப்படும் அமல்கள்"" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்
தனிநபர் தாவா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று காலை 9:00 மணியளவில் ஸ்ரீ நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மொத்தம் 32 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு மதரஸா மேண்மை படுத்துவதற்காக மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து பேரன்ஸ் மீட்டிங் நடத்தப்பட்டது சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)
சஹாபிய பெண்மனிகளின் தியாக வரலாறு பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
கிளை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளையின் எதிர்கால தாவா பணி சம்பந்தமான கிளை உறுப்பினர் களின் ஆலோசனை கூட்டம் 1-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் நடைபெற்றது அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1, பிரமத தாவா
2, தனி நபர் தாவா
3, மங்கலம் பகுதியில் அருகிலுள்ள இடங்களில் தாவா பணி
4, புக் ஸ்டால் போடுவது
5, நீர் மோர் பந்தல் அமைத்தல்
போன்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களை நியமனம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 1-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)




























