Friday, 24 April 2015
மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 22/04/2015 அன்று பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
எழுத்து வடிவில் திருக்குர்ஆன் _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 152. எழுத்து வடிவில் திருக்குர்ஆன் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை
இவ்வசனங்கள்
(2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26: 195, 29:48, 75:16,
75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில்
திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுவோருக்கு மறுப்பாக அமைந்துள்ளன.
"எழுத்து
வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்' என்று 6:7வசனத்தில்
கூறப்படுவதில் "எழுத்து வடிவில் அருளப்படவில்லை' என்ற கருத்து
அடங்கியுள்ளதை
Thursday, 23 April 2015
மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 23.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?
இவ்வசனத்தில் (5:101) இறைச் செய்தி அருளப்படும் போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
மார்க்க அறிஞர்களிடம் எந்த எதிர்க்கேள்வியும் கேட்கக் கூடாது என்று கூறுவோர் இவ்வசனத்தை தமக்குச் சான்றாகக் காட்டுவார்கள்.
ஆனால்
இவ்வசனம் இறைத்தூதரிடம் இறைச்செய்தி அருளப்படும் போது கேள்வி கேட்கக்
கூடாது என்று தான் கூறுகிறது. ஏன் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கான
காரணமும் கூறப்படுகிறது.
என் தந்தை யார் என்று கூட சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். (நூல் புகாரி 4621, 4622)
இது போன்ற
கேள்விகள் கேட்கப்பட்டால், இவர் யாரைத் தந்தை என நினைக்கிறாரோ அவர்
அல்லாதவர் தந்தையாக இருந்து விட்டால் தேவையற்ற மனச்சங்கடத்தை அவர்
சந்திப்பார்.
எனவே தான் இறைத்தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.
பொதுவாக அறிஞர்களிடம் கேள்வி கேட்பதை திருக்குர்ஆன் (16:43, 21:7) அதிக அளவில் ஊக்குவிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதை கீழ்க்காணும் வசனங்களில் காணலாம்.
(திருக்குர்ஆன் 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 17:85, 18:83, 20:105, 33:63, 51:12, 70:1)
அதிக விளக்கத்திற்கு 31வது குறிப்பையும் காண்க!
Wednesday, 22 April 2015
வடுகன்காளிபாளையம் கிளை செயற்குழு
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை செயற்குழு 19-4-2015 அன்று நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் சகோ . யாசர் ( மாவட்ட தொண்டரணி செயலாளர்) அவர்கள் கலந்து கொண்டு தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கினார். மேலும் வடுகன்காளிபாளையம் கிளையின் பள்ளிவாசல் இடத்தின் பத்திரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)





















.jpg)




.jpg)