Friday, 13 June 2014

M.S.நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 12.06.2013 அன்று  M.S.நகர் கிளையின் பொதுக்குழு மாநிலசெயலாளர்.ஆவடி இப்ராஹிம்தலைமையில் 
மாவட்டதலைவர் நூர்தீன், மா.செயலாலர்.  ஜாஹிர் அப்பாஸ்,
மா.பொருலாலர்.   சலிம் பாய், மா.வர்த்தகரணிசெயலாலர்.  முஹம்மதுபசீர் அவர்கள் முன்னிலையில்  நிர்வாகமாற்றம் செய்யப்பட்டது

புதிய நிர்வாகம்


தலைவர்                            அர்ஷத்                     78714 44888
செயலாளர்                       இலியாஸ்                97875 39684
பொருளாளர்                    சிராஜ்                         78718 88444
துணைத் தலைவர்        அப்துல்லாஹ்         98659 86567
துணை செயலாளர்        அல்தாப்                    96778 88875
மருத்துவஅணி               அனஸ்                       97892 91524
மாணவரணி                   சையது கமருதீன்   96884 81235


"நரகில் தள்ளும் பராஅத் இரவு" _ 5 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 12.06.2014 அன்று  கோம்பை தோட்டம் பழகுடோன், காயிதேமில்லத்நகர், ஜம்ஜம் நகர், வி.ஐ.பி. நகர், காயிதேமில்லத் மெயின்வீதி, ஆகிய 5 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. பசீர்  மற்றும், சகோ.சதாம்உசேன் ஆகியோர்  "நரகில் தள்ளும் பராஅத் இரவு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

"ரமலானின் சிறப்புகள்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09.06.14 அன்று கிடங்கு தோட்டம்1 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோ.ஹாஜிரா அவர்கள் "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 45 பெண்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் மாதத்தின் சிறப்புகள்" நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 25 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50 நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06.06.2014 ஜுமுஆக்கு பின் 40 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  80  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

"பராஅத் இரவு வழிகேடே!" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 12.06.2014  அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "பராஅத் இரவு வழிகேடே!" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

Thursday, 12 June 2014

3யூனிட்அவரச இரத்த தான உதவி _பெரிய கடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 12.06.2014  அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 3யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _ஊத்துக்குளி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளையின் சார்பாக  11.06.2014 அன்று ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. ஒரு வீட்டில் தஃவா செய்து அந்த வீட்டின் முன் இருந்த திருஷ்டி எலுமிச்சை அகற்றப்பட்டது

பிறமத சகோதரி பிரசவ சிகிச்சைக்கு1யூனிட் அவரச இரத்த தான உதவி _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 12.06.2014  அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பிறமத சகோதரி.சுப்புலட்சுமி அவர்களின் பிரசவ சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

"பராஅத் இரவு" _பெரியகடைவீதி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09.06.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. பசீர்  அவர்கள் "பராஅத் இரவு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

"பராஅத் ஓர் பித்அத்" _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளை சார்பாக 10.06.2014 அன்று ஜம்ஜம்நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. தவ்பீக் அவர்கள் "பராஅத் ஓர் பித்அத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

O+ இரத்தம் 1யூனிட்அவரச இரத்த தான உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 11.06.2014  அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

எழுத்துவடிவில் திருகுர்ஆன் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "எழுத்துவடிவில் திருகுர்ஆன்"எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை
இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26: 195, 29:48, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுவோருக்கு மறுப்பாக அமைந்துள்ளன.
"எழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்' என்று 6:7வசனத்தில் கூறப்படுவதில் "எழுத்து வடிவில் அருளப்படவில்லை' என்ற கருத்து அடங்கியுள்ளதை அறியலாம்.
வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர் என்று 4:’153 வசனம் கூறுகிறது. எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும் என அன்றைய மக்கள் கேட்டதிலிருந்து அவ்வாறு அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம்.
இவ்வேதம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மாறாக ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டது என்று திருக்குர்ஆன் (2:97, 26:194) கூறுகிறது.
உமது நாவை இதற்காக அவசரப்பட்டு அசைக்காதீர். அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது என்று  திருக்குர்ஆன் (75:16-19) கூறுகிறது.
ஜிப்ரீல் (அலை) அவர்கள், குர்ஆனை எழுத்து வடிவில் கொடுத்திருந்தால் அவசரம் அவசரமாக நபிகள் நாயகம் (ஸல்) மனனம் செய்ய முயற்சிக்க வேண்டியதில்லை. ஜிப்ரீல் போன பிறகு எழுதியதை வாசிக்கச் செய்து மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும்.
எழுத்து வடிவில் இல்லாததால் மறந்து விடுமோ என்று பயந்து தமது நாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகவேகமாக அசைக்கிறார்கள். "அவ்வாறு அசைக்கத் தேவையில்லை. உள்ளத்தில் பதிவு செய்ய வைப்பது என்னுடைய வேலை' என்று இறைவன் பொறுப்பேற்கிறான்.
எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்படவே இல்லை என்பதற்கு இதுவும் மிகத் தெளிவான சான்று.
உமக்கு நாம் ஓதிக்காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான் என்று திருக்குர்ஆன் (87 : 6, 7) கூறுகிறது.
நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம் என்ற வாசகம் திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைக் கூறுகிறது. அதை நீர் மறக்க மாட்டீர் என்பது மேலும் இதை வலுப்படுத்துகிறது. மறக்க முடியாத நினைவாற்றல் வழங்கப்பட்டிருப்பதால் எழுத்து வடிவம் அவர்களுக்குத் தேவையில்லை என்பதும் இதனுள் அடங்கியுள்ளது.
எனவே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவே இல்லை என்பது சந்தேகமற நிரூபணமாகிறது.
நபிகள் நாயகத்திற்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் தெளிவுபடுத்துகின்றது. இது குறித்து அறிய 312வது குறிப்பைக் காண்க!
எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகத்திற்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருக்க முடியாது என்பதும் தெளிவாகின்றது.

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்று இவ்வசனங்கள் (6:312, 7:157, 7:158, 25:5, 29:48) கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக்கட்டிக் கூறி வருகின்றனர்.
படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர்கள்'' என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.
அல்லது படிக்காத ஒருவரை தங்களின் வழிகாட்டி என்று சொல்ல வெட்கப்படுகிறார்களோ என்னவோ?
இதற்கு ஆதரவாகச் சில சான்றுகளையும் எடுத்து வைக்கின்றனர். இந்தச் சான்றுகள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது உண்மையில் தகுதிக் குறைவு தானா? என்பதை ஆராய்வோம்.
படிப்பறிவு இல்லாதிருப்பது பொதுவாக தகுதிக் குறைவாகக் கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது. ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்துவதாக அமைந்து விடும்.
படிப்பறிவு மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.
எனக்கு இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இதுபோல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுமொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பதுதான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும்.
அவர்கள் எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் ஏற்படுத்திய நிலைதான் இந்தத் தகுதிக் குறைவு.
"எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத்தான் இருக்க முடியும்'' என்று அன்றைய மக்கள் நம்பியதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மையே முக்கியக் காரணமாக இருந்தது.
இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. திருக்குர்ஆன் 29:48 வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறுதான் கூறுகிறான். "உமக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'' என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.
வேறொரு சிறப்பை அவர்களுக்கு அளிப்பதற்காக இதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லை என்று இவ்வசனம் (29:48) இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவித்து விடுகிறது.
நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.
திருக்குர்ஆன் 7:157,158 வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை "உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.
இது முன்னோர்களின் கட்டுக்கதை. இதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது எனவும் கூறுகின்றனர். (திருக்குர்ஆன் 25:4,5)
இந்தக் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இட்டுக்கட்டியதாக அவர்கள் கூறினார்கள். மேலும், பலர் இதற்கு உதவியாக இருந்ததாகவும் கூறினார்கள். அப்படிக் கூறும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக எழுதிக் கொண்டார்கள் எனக் கூறாமல் மற்றவர்களை வைத்து எழுதிக் கொண்டார்கள் எனக் குறிப்பிட்டனர். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பது அந்த மக்களுக்கும் நன்றாகத் தெரிந்த காரணத்தினால்தான் எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதிக் கொண்டார் என்று கூறினார்கள்.
"கதப' என்றால் எழுதினான் என்பது பொருள். "இக்ததப' என்றால் ஒருவரிடம் சொல்லி எழுத வைத்தான் என்பது பொருள். மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தில் "இக்ததப' என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக 29:48 வசனம் அமைந்துள்ளது.
இதற்கு முன்னரும் எந்த நூலில் இருந்தும் நீர் வாசித்ததில்லை; இனியும் உமது வலக்கரத்தால் எழுத மாட்டீர் என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது.
உமது வலக்கரத்தால் எழுதிக் கொண்டும் இருந்ததில்லை என்று சிலர் தமிழாக்கம் செய்திருப்பது தவறாகும். "வலாதஹுத்து' என்பது எதிர்கால வினைச் சொல்லாகும். இனியும் எழுத மாட்டீர் என்பதே இதன் நேரடியான சரியான மொழிபெயர்ப்பாகும்.
நபியாக ஆவதற்கு முன்பும் எழுதவில்லை. இனியும் எழுத மாட்டீர் என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் "நபியாக ஆன பின்பு எழுதப்படிக்க அறிந்திருக்கக் கூடும்'' என்று சிலர் வாதம் செய்வது தவறு என்பது நிரூபணமாகின்றது.
நபிகள் நாயகத்திற்கு எழுதப் படிக்கத் தெரியும் எனக் கூறுவோர் பின்வரும் நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டுவார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்' என்று எழுதப்பட்டதை எதிரிகள் மறுத்தனர். அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் ஏற்றுக் கொண்டால் தான் நமக்கிடையே எந்த விவகாரமும் இல்லையே எனக் கூறினார்கள். இதை ஏற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்'' என்பதை அழித்து விட்டு "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்'' என்று எழுதச் சொன்னார்கள். நபித்தோழர்கள் யாரும் நபிகள் நாயகத்தின் பெயரை அழிக்க முன்வரவில்லை. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட தமது பெயரை அழித்தார்கள். (பார்க்க: புகாரி 2500, 2501, 2947, 3920)
நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரிந்திருந்தால் தான் தமது பெயரைக் கண்டு பிடித்து அழித்திருக்க முடியும் என்றும் வாதிடுகின்றனர். எழுதத் தெரியாது என்று தெளிவான சான்றுகள் இவ்வளவு இருக்கும் போது சுற்றி வளைத்துக் கொண்டு சான்று காட்டுகின்றனர்.
இவர்களின் வாதம் தவறு என்று புகாரி 3184வது ஹதீஸ் மறுக்கின்றது. "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்ததால் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்'' என்பதை அழித்து விட்டு "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்'' என்று எழுதுமாறு அலீ (ரலீ) அவர்களுக்குக் கட்டளையிட்டனர்; அலீ (ரலீ) அவர்கள் அழிக்க மறுத்து விட்டார்; "அப்படியானால் அந்தச் சொல் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுங்கள்'' என்று அலீ (ரலீ) அவர்களிடம் கேட்டனர். அலீ (ரலீ) அவர்கள் அந்த இடத்தைக் காட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் அழித்தனர்'' என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது.
எழுதத் தெரியாமல் இருப்பது பொதுவாக தகுதிக் குறைவு என்றாலும் அதுவே நபிகள் நாயகத்திற்கு மட்டும் சிறப்பான தகுதியாகும் என்பதில் சந்தேகமில்லை.

"மகத்தான மாமனிதர்" _கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளை சார்பாக 08.06.2014 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  சகோதரர். H.M அஹ்மது கபீர் அவர்கள் "தற்கொலைகளும் ஜனாசா தொழுகையும்"எனும் தலைப்பிலும்,
சகோதரர். K.S.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி  அவர்கள் "மகத்தான மாமனிதர்"எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Wednesday, 11 June 2014

"இஸ்லாத்தில் இல்லாத பராஅத்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. சதாம்உசேன் அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத  பராஅத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பிறமத சகோதரர்.சபரீஸ் க்கு புத்தகங்கள் வழங்கி தஃவா _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 10.06.2014 அன்று பிறமத சகோதரர்.சபரீஸ் அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"மறுமை சிந்தனை" _யாஸின் பாபு நகர்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாஸின் பாபு நகர்  கிளையின் சார்பாக 08.06.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "மறுமை சிந்தனை"  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

"பராஅத் ஓர் வழிகேடு " _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 10.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம்உசேன் அவர்கள் "பராஅத் ஓர்  வழிகேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பில் 08.06.2014 அன்று சகோ.ஆஜம்  அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

1யூனிட்அவரச இரத்த தான உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 10.06.2014  அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

"ஆழ்கடலிலும்அலைகள் உள்ளன" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 11.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "ஆழ்கடலிலும்அலைகள் உள்ளன"   எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன

24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.
(இருள்களைப் பற்றி 303வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.)
கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதில் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப்பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை.
சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டபோது, ஒரு பனைமரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனைமர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆர்ப்பரித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன.
சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரைக்கு அருகில் கடலில் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
கடலின் ஆழத்திலும் பிரமாண்டமான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனைமர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
ஆழ்கடலுக்கு உள்ளேயும் பேரலைகள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.

"பித்அத்தும் பராஅத்தும்" _வெங்கடேஸ்வரா நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 10.06.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ. யாசர் அவர்கள்  "பித்அத்தும் பராஅத்தும்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

பித்அத்தும் பராஅத்தும் _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 09.06.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ. தவ்பீக் அவர்கள்  "பித்அத்தும் பராஅத்தும்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

Tuesday, 10 June 2014

"மனிதன் வளர்வதும் தேய்வதும் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 09.06.2014 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள்   "மனிதன் வளர்வதும் தேய்வதும் " -333 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

 333. மனிதன் வளர்வதும் தேய்வதும்
அதிக காலம் மனிதன் வாழும் போது இறங்குமுகத்தை நோக்கிப் பயணிக்கிறான் என்று இவ்வசனத்தில் (36:68) கூறப்படுகிறது.
16:70, 22:5 வசனங்களிலும் அல்லாஹ் இது பற்றி கூறுகிறான்.
மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து, நடையை இழந்து படுக்கையில் விழுகிறான். நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான்.
மனிதன் நடுத்தர வயது வரை ஏறுமுகமாக சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறான். நடுத்தர வயதை அடைந்த உடன் இறங்குமுகமாகத் தேய்ந்து இறுதியில் பச்சிளம் குழந்தை படுக்கையில் மலஜம் கழித்தது போன்ற நிலையை அடைகிறான். இதைத்தான் இவ்வசனம் படைப்பில் இறங்குமுகம் என்று கூறுகிறது.

"பலவீனங்களை விட்டும் தூய்மையானவன் " உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 10.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "பலவீனங்களை விட்டும் தூய்மையானவன் "  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இறைவன் தூயவன் என்பதன் பொருள்

தூய்மையானவன் எனத் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் ஸுப்ஹான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸுப்ஹான் என்றால் தூய்மை என்பது பொருள். நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை எனும் சொல், அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் ஸுப்ஹான் என்பது அதை விட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும்.
"கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன்'' என்பதே ஸுப்ஹான் என்பதன் பொருளாகும்.
"தூக்கம், இயலாமை, பலவீனம், தோல்வி, இயற்கை உபாதை, மனைவி, மக்கள், தாய் தந்தை, பசி, தாகம் போன்ற அனைத்திலிருந்தும் நீங்கியிருத்தல்'' என்பது இதன் பொருளாகும். இந்தச் சொல்லை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் பயன்படுத்தக் கூடாது.
அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்க அரபியில் வேறு சொற்கள் உள்ளன.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:32, 2:116, 3:191, 4:171, 5:116, 6:100, 7:143, 9:31, 10:10, 10:18, 10:68, 12:108, 16:1, 16:57, 17:1, 17:43, 17:93, 17:108, 19:35, 21:22, 21:26, 21:87, 23:91, 24:16, 25:18, 27:8, 28:68, 30:40, 34:41, 36:36, 36:83, 37:159, 37:180, 39:4, 39:67, 43:13, 43:82, 52:43, 59:23, 68:29)