Wednesday, 12 September 2012

தெருமுனை பிரச்சாரம்-மங்கலம் கிளை


இறைவனின் திருப்பெயரால்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2012 அன்று மங்கலம் சக்தி மஹால் அருகில்  மாலை07:00மணி முதல்  08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் கூறும் விஞ்ஞானம் என்ற தலைப்பிலும் சகோ சிராஜ்தீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்


POSTED BY மாணவரணி SHAHID

மாணவர் அணியின் பயான் பயிற்சி-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 09-09-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 15 இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் வரும் வாரங்களில் ஞாயிறு தோறும் காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரையும் புதன் தோறும் இரவு 09:00 மணி முதல் 09:30 மணி வரையும் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது

POSTED BY மாணவரணி SHAHID

Tuesday, 11 September 2012

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன?




சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முஹம்மது அப்துல்காதர்விருதுநகர்
அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்துஅந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால்இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும்.

வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிரவேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் அறிவுடைய மக்கள் முடிவுக்கு வருவார்கள்.
பாறைகளை உடைப்பதன் மூலம்தான் சாலை வசதிகளைப் பெற முடியும் என்பதால்இதற்காக வெடிமருந்துகளைப்  பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.
உணவைச் சமைத்துச் சாப்பிட நெருப்பு அவசியம். அதை உருவாக்கிட தீப்பெட்டி அவசியம் என்பதால் இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.

படிப்படியாகக் குறைந்து வரும் தீப்பெட்டிப் பயன்பாடு காலப்போக்கில் அறவே இல்லாமல் போய்விடும். அதுபோல் ஜல்லிகள் மூலம் சாலைகள் போடுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் தொழில் நுட்பம் அதிகரிக்கும்போது பாறைகளை உடைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். அப்போது மக்களுக்கு வெடி மருந்துகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும்.
அதுவரை மேற்கண்ட இரண்டு காரியங்களுக்கு மட்டுமே வெடிமருந்துகள் குறைந்த அளவுக்கு தேவைப்படும். இவற்றைத் தவிர மற்ற அனைத்துப் பயன்பாடுகளில் இருந்தும் வெடி மருந்துகளைத் தள்ளிவைப்பதுதான் அறிவுப்பூர்வமானது.
ஆனால் மக்கள் சர்வசாதாரணமாக வெடி மருந்துகளுடன் விளையாடும் நிலைக்கு  பட்டாசு உபயோகமே காரணமாகும். தீபாவளி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தி இதற்கு பட்டாசு வியாபாரிகள் மதச் சாயம் பூசிவிட்டதே இந்த பேராபத்துக்குக் காரணம்.
உண்மையில் இதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பட்டாசுகள் பிற்காலத்தில் வந்த கண்டுபிடிப்பாகும்.
முந்தைய காலத்தில் தீபாவளி கொண்டாடிய இந்துக்கள் பட்டாசுகளை அறிந்திருக்கவில்லை. எனவே மதத்துக்கு வெளியே நின்று சிந்திப்பதுதான் சரியானதாகும். இப்படி சிந்தித்தால் பட்டாசுகள் வெடிப்பதால் கீழ்க்கண்ட தீமைகள் ஏற்படுவதை உணரலாம்.
பொருளாதாரத்தைத் பயனற்ற வழியில் விரயமாக்குவது
பட்டாசு வெடித்து உயிர்கள் பலியாவது
பட்டாசுகள் மூலம் குடிசைகள் எரிந்து சாம்பலாவது
பட்டாசு வெடிப்பவர்களுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் படுகாயங்களை ஏற்படுத்துவது
மனிதனின் காதுகள் தாங்கிக் கொள்ள முடியாத அதிக சப்தம் காரணமாக கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகள்
இதய நோயாளிகளும்பச்சிளம் குழந்தைகளும்சிந்திப்பவர்களும்படிப்பவர்களும் இந்த சப்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகுவது
பட்டாசுகள் மூலமாக வெளியேறும் நச்சுப்புகை மூலம் காற்று மாசு படுகிறது
அதை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களும்இன்னபிற உயிரினங்களும் கடும் பாதிப்புக்குகளைச் சந்திக்கின்றன.நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பட்டாசு வெடிப்பதன் மூலம் குப்பைகளின் அளவும் அதிகரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
நச்சுப் பொருள் கலந்த குப்பைகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் இதனால் எந்த நன்மையாவது உள்ளதா என்றால் அதுவும் இல்லை.
நவீன சாதனங்கள் பயன்படுத்துவதன் காரணமாக காற்று மாசு படுவதாகவும்பூமி வெப்பமயமாகி வருவதாகவும்ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வந்து மனிதர்களுக்கு கேடுகள் ஏற்படுத்துவதாகவும் கூறி அந்த நவீன சாதனங்களின் பயன்பாட்டைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேற்கண்ட சாதனங்களால் சில கேடுகள் ஏற்பட்டாலும் அது பட்டாசினால் ஏற்படும் கேடுகளை விட பலப்பல மடங்கு குறைவானதுதான். அத்துடன் இந்த சாதனங்கள் மூலம் விரைவாகவும் பணிகள் முடிகின்றன. சொகுசான இன்பங்களை அனுபவிக்கிறோம். இதற்காக மேற்கண்ட தீமைகளை நாம் சகித்துக் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இதைவிட பெரும்கேடு ஏற்படுத்தும் பட்டாசுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
அறிவுள்ள மக்களுக்குத் தெரியும் இந்த விபரம் ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை.
அவசியமற்ற கேடுகள் விளைவிக்கின்ற பட்டாசுகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று முடிவு செய்தால்இதுபோன்ற அழிவுகளுக்கு இடமில்லை.
பட்டாசைக் காரணம்காட்டி வெடி மருந்துகள் பரவலாகக் கிடைப்பதால்தான்வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதிகளுக்கும் வசதியாகப் போய்விடுகிறது.
இதைப்பற்றி சிந்திக்காமல் நீதி விசாரணை நடத்துவதும் நஷ்ட ஈடு கொடுப்பதும்தான் அரசின் நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பேரழிவுகள் தொடர்கதையாகிப் போய்விடும்.
நன்றி;-http://onlinepj.com/unarvuweekly/crackers-how-to-ban-17-03/

POSTED BY மாணவரணி SHAHID

பள்ளிவாசல் கட்டுவதற்கு நிதியுதவி-மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-09-2012 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை பள்ளிவாசல் கட்டுவதற்கு 6200 ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது 

POSTED BY மாணவரணி SHAHID

Monday, 10 September 2012

வட்டி இல்லா கடன் உதவி-உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
09.09.2012
அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
கோவை சகோதரர்.
   ஜாகிர்
அவர்களுக்கு ரூ.20000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

POSTED BY மாணவரணி SHAHID

தபால் துறையில் வேலைவாய்ப்பு


தமிழக தபால் வட்டத்தில்தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் 
வரவேற்கப்படுகின்றன.


தமிழக தபால்வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
                                          
                      தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தகுதி உள்ள தேர்வர்கள்இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில்நேரடியாகவோ அல்லது," www.indiapost.gov.in, www.tamilnadupost.nic.in' ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்பக்கட்டணமாக, 50 ரூபாயும்தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும்
மேலும் எஸ்.சி., எஸ்.டி., மகளிர்,ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்குதேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

அதே போல்,பணம் செலுத்தியதற்கான ரசீதைபதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள, ஏழு இலக்க எண்ணைரசீதின் பின்புறம் குறிப்பிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

முக்கிய தேதிகள் 

விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2012 முதல்25.09.2012 வரை விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் : 01.10.2012 

விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 


'Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110001' 


குறிப்பு : விண்ணப்பங்களை Speed Post/ Register Post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்

கூடுதல் தகவல்களுக்கு 

http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm 

பார்வையிடவும்.

POSTED BY மாணவரணி SHAHID

பெண்கள் பயான்-பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பல்லடம் கிளை சார்பாக 09.09.2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் A.சதாம் ஹுசைன் அவர்கள் இஸ்லாமிய பெண்களின் இன்றைய கல்வி நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

POSTED BY மாணவரணி SHAHID

ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி-திருப்பூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மருத்துவரணி சார்பாக கடந்த 07.09.2012 அன்று A.ஷங்கர் என்ற சகோதரருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 7624.00 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

POSTED BY மாணவரணி SHAHID

Sunday, 9 September 2012

வட்டி இல்லா கடன் உதவி-உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
08.09.2012
அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
தாராபுரம்  சகோதரர்.
   சேக் அப்துல்லாஹ்
அவர்களுக்கு ரூ.5000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

POSTED BY மாணவரணி SHAHID

வட்டி இல்லா கடன் உதவி-உடுமலைகிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளைசார்பாக
 
09.09.2012 அன்று  வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
உடுமலை   சகோதரர்.   அன்வர்சதாத் அவர்களுக்கு 
ரூ.11500/=  வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

POSTED BY மாணவரணி SHAHID

Monday, 3 September 2012

திருப்பூர் மாவட்ட மாணவர் அணியின் ஒருங்கிணைப்பு கூட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவர் அணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் 02.09.2012 அன்றுநடைபெற்றது.
இதில் மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் சமீம் அவர்கள், "மறுமை வாழ்வும், மாணவர்அணியின் பணிகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் மாணவர்அணி செய்ய வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினார்.
மேலும் கிளைகளில் இதுவரை செய்யப்பட்ட பணிகள்குறித்தும் கேட்டறிந்தனர்.இதில் மங்களம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு கிளைகளில் இருந்து மாணவர் அணிசெயலாளர்கள் கலந்து கொண்டனர்.


POSTED BY மாணவரணி SHAHID

Thursday, 9 August 2012

திக்கு முக்காட வைத்த திருப்பூர் விவாதம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் மாவட்டம் – காலேஜ் ரோடு கிளையில் ‎உள்ள டிஎன்டிஜே உறுப்பினர் ஒருவரிடத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ ‎சகோதரர் ஆனந்தன் என்பவர்,
“இயேசுவைத்தான் நாம் ரட்சகராக ஏற்றுக் கொள்ள ‎வேண்டும். அவர்தான் நமது பாவங்களைப் போக்க தன்னையே ஒப்புக்கொடுத்தார்” ‎என்று கூறி தங்களது மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையைச் செய்துள்ளார். இந்த ‎செய்தியை மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்க, தலைமையில் நடைபெற்ற ஒரு மாதப் ‎பிரச்சாரகர் பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுத்த முஹம்மது யூசுப் அவர்கள் திருப்பூர் ‎மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கிறித்தவ போதகருடன் விவாதம் செய்ய அந்தப் ‎பகுதிக்குச் சென்று ஆனந்தன் என்ற அந்த கிறித்தவ சகோதரரிடத்தில் சில ‎கேள்விகளைக் கேட்டுள்ளார்.‎
இயேசு இரட்சிக்க வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட கிறித்தவ போதகர் :‎

பேச்சைத்துவக்கியதுமே நமது தரப்பில் ஒரு கேள்வி அவரை நோக்கி ‎கேட்கப்பட்டுள்ளது. ஒரு கம்பெனியின் முதலாளி ஒரு நபரை கம்ப்யூட்டர் ‎ஆபரேட்டராக வேலைக்குச் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலையை நீ செய்ய ‎வேண்டும் என்று அவரிடத்தில் பொறுப்புக் கொடுத்து அனுப்பி வைக்கின்றார். ஆனால் ‎அந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரோ தனது பணியின் முக்கியத்துவத்தை அறியாமல், ‎‎“முதலாளியே! முதலாளியே! ஏன் என்னை இந்த வேலைக்கு அனுப்பினீர்! என்னை ‎விட்டால் உனக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? இந்த வேலையைக் கொடுத்து ஏன் ‎என்னை சோதிக்கின்றீர்? ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்பாரேயானால், அந்த ‎கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தனது வேலையை சரிவரச் செய்தார் என்று சொல்லலாமா? ‎அவருக்கு முதலாளி சம்பளம் கொடுப்பது சரியா?” என்ற ஒரு கேள்வியை ‎எழுப்பியுள்ளார்.‎
அதைக்கேட்ட கிறித்தவ போதகரோ, “அது எப்படி சரியாகும்? தனது வேலையை முழு ‎திருப்தியோடு செய்யாமல், என்னை ஏன் இந்த வேலைக்கு அனுப்பி சோதிக்கின்றீர்? ‎என்று ஒருவர் கேட்பாரேயானால் அது ரொம்பத் தவறு. அவர் தனது வேலையை முழு ‎திருப்தியோடு செய்தவராகமாட்டார். அவரே விரும்பி அந்த வேலையைச் ‎செய்தவராகமாட்டார்” என்று சொல்லியுள்ளார்.‎
அதற்கு நமது சகோதரர், “அப்படியானால், இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்; ‎அவர் நமக்காக தன்னையே ஒப்புக் கொடுத்தார். அவர் தன்னையே பலி கொடுத்தார் ‎என்று சொல்லுகின்றீர்களே! ஆனால் அவரோ தன்னை சிலுவையில் அறையும் போது, ‎‎”தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்!” என்று அழுது புலம்பி கர்த்தரை ‎திட்டிக் கொண்டல்லவா உயிரை விட்டுள்ளார். இவராக விரும்பி மரணித்தார் என்று ‎எப்படி சொல்கின்றீர்கள்? இந்த பாத்திரத்திலிருந்து என்னை விடுவித்துவிடும் என்று ‎சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னால் சாவுக்கேதுவான துக்கங்கொண்டு ‎புலம்பியவர்தான் ஏசு என்று பைபிள் கூறுகின்றது. அப்படியிருக்கையில் அவர் ‎நமக்காக பலியானார் என்பது சரியா?” என்று கேள்வி எழுப்பியவுடன், “பிரதர், நீங்க ‎ரொம்ப டீப்பா கிறித்தவத்தை ஆய்வு செய்துள்ளீர்கள். உங்களுக்கு என்னால் பதில் ‎சொல்ல முடியாது. கோயம்பத்தூரில் பெரிய போதகர்கள் குழு உள்ளது. அவர்களை ‎அழைத்து வருகின்றேன். அவர்களிடத்தில் என்ன கேள்வி வேண்டுமானாலும் நீங்கள் ‎கேளுங்கள். அவர்கள் அனைத்திற்கும் பதில் சொல்வார்கள்” என்று ஆனந்தன் ‎கூறியவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதம்தான் திருப்பூர் கிறித்தவ விவாதம்.‎
இதன் பிறகு நமது சகோதரர்களை தொடர்பு கொண்ட கிறித்தவத்தரப்பினர், “நீங்கள் ‎ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு நடத்திய விவாதத்தையெல்லாம் நாங்கள் ‎பார்த்துவிட்டோம். எங்களிடம் வந்து கேள்வி கேட்டுப் பாருங்கள்; நாங்கள் எப்படி பதில் ‎சொல்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; நாங்கள் ஒன்றும் ‎ஜெர்ரிதாமஸ் போல உளறமாட்டோம்; அவரைப் போல திணற மாட்டோம். நீங்கள் ‎கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் நாங்கள் கிரிட்டிக்கலாக பதில் சொல்வோம்” என்று ‎கூறி அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி என்ற இடத்திலுள்ள கோஸ்பல் ‎தேவாலயத்திற்கு நம்மை அழைத்து எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்க இருபுறமும் ‎ஒப்பந்தக்கடிதம் பரிமாறப்பட்டது. அதையடுத்து கடந்த 16.07.2012 திங்கட்கிழமையன்று ‎அன்று விவாதம் காலை 11 மணிக்கு ஆரம்பமானது.‎
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ‎அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், அஹமத் கபீர், முஹம்மத் யூசுப், ‎சதாம்ஹுசைன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹுசைன், அலாவுதீன் ‎ஆகியோர் கலந்து கொண்டனர்.‎
கோஸ்பல் (நிளிஷிறிணிலி) சபையின் சார்பாக சகோ. சாலமன், ஆனந்தன், சகோ. ‎நாப்தலின் மற்றும் அவர்களது குழுவினர் கலந்து கொண்டனர்.‎
சத்தியத்தைக் கண்டு அசத்தியவாதிகள் எப்படி சிங்கத்தைப் பார்த்து ‎வெருண்டோடக்கூடிய கழுதைகளைப் போல ஓடுவார்கள் என்பது இந்த விவாதத்திலும் ‎உண்மையானது. அவர்கள் கிரிட்டிக்கலாகக் கேட்ட கேள்விகளின் லட்சணம் என்ன? ‎வழக்கம்போல தவ்ஹீத் ஜமாஅத் குழுவினரிடத்தில் மாட்டிக் கொண்டு ‎எப்படியெல்லாம் விழிபிதுங்கித் திணறினர்? எப்படியெல்லாம் திக்குமுக்காடினர் என்பது ‎குறித்த முழுவிபரங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் விரிவாகக் காண்போம்.‎

என்றும் அன்புடன் SM.YOUSUF

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – திருப்பூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கடந்த 01-07-2012. அன்று மாலை 400.மணியளவில் திருப்பூரில் உள்ள டவுன்ஹால் வளாகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் அல்லாத பிற மத சகோதர சகோதரிகளின் மனங்களில் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை, திருமண முறை, வரதட்சனை, விவாகரத்து, இஸ்லாமிய பெண்களின் ஆடைமுறை, பென்டிமைத்தனம், குற்றங்களுக்கான இஸ்லாத்தில் உள்ள கடுமையான் தண்டனை,போன்ற சந்தேகங்களுக்கும். முஸ்லிம் மக்களிடம் உள்ள மூட பழக்க வழக்கங்களும் கட்டாய மத மாற்றம், தீவிரவாதம், பயங்கர வாதம், போன்ற குற்றச்சாட்டுகளும். இஸ்லாமிய வாழ்வியல் சட்ட திட்ட முறைகள்.குறித்த சந்தேகங்கள் ஆகியவற்றை வெளிப்படையாகவும் எந்தவித தயக்கங்கள் இன்றியும் கேள்விகளாக கேட்டு ஓரு மத நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்யும் ஒரு நிகச்சியாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் பிற மத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மாநிலத் தலைவர் p.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். அளித்து பேசினர் இதில் மாவட்டத்தலைவர்: ஷேக்பரித் துனைத்தலைவர்: ஷாஜகான். மாவட்ட
பிறமத சகோதர சகோதிரிகள் நூற்றுக்கணக்கானனோர் பார்வையாளர்களாகவும் இஸ்லாமிய மக்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானனோர் கலந்து கொண்டனர்.
கேள்வி கேட்ட பிறசமய சகோதரர்களுக்கு ரியாத் மண்டலம் சார்பாக குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

என்றும் அன்புடன் SM.YOUSUF