Wednesday, 28 February 2018
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (26-02-2018, திங்கள்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இறந்தவர்களுக்காக மூன்றாம் ஜியாரத், ஏழாம் ஜியாரத், 40ஆம் நாள், வருஷ பாத்திஹா, யாஸீன் ஓதுதல் இஸ்லாத்தில் உண்டா?! என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.!
பேருந்துகளின் நேரங்கள் அடங்கிய கால அட்டவணை பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான தகவல் பலகை மற்றும் வடுகன்காளிபாளையம் பகுதிக்கு வந்துசெல்லும் பேருந்துகளின் நேரங்கள் அடங்கிய கால அட்டவணையை தயார் செய்து பஸ் ஸ்டாப் அருகே ப்ளெக்ஸாக வைக்கப்பட்டது .(ப்ளெக்ஸ் - 6×4 ) அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பிறர்பார்பதற்காக அமல்செய்யாமல் இறைவனின் திருபொருத்ததை எதிர்பார்த்து அமல் செய்யவோம் என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)





















