திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக15.08.14 அன்று காலேஜ் ரோடு கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக ஜூம்ஆவிலும் மற்றும் தனி நபர் இடமும் வசூல் செய்யப்பட்டு ரூ.10,500வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக14.08.14அன்று பெண்கள் குழு தாஃவா நடைபெற்றது. மங்கலம் ரம்யா கார்டன் பகுதியில் உள்ள 40 வீடுகளில் தொழுகையின் அவசியம் மற்றும் இணைவைப்பிற்கு எதிரான நோடீஸ்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக22.08.14அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான் இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 23.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குரங்கிலிருந்து மனிதன் பிறக்கவில்லை எனும் தலைப்பில் சகோ. தீன் அவர்கள் விளக்கம் அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையில் 21.08.14 அன்று பள்ளிவாசல் கட்டிடத்தை விரைந்து கட்டி முடிப்பதற்காக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21.08.14 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 21.08.14 அன்று பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிற மத சகோதரர்கள் சிவானந்தம், கணேஷ், அபிசேக் ஆகியோருக்கு இஸ்லாம் குறித்து தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
குறிப்பு : பள்ளிக் கூடத்தில் தாஃவா செய்யப்பட்டதால் படம் எடுக்க முடியவில்லை.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.08.14அன்று மூட நம்பிக்கையின் அடிப்படையில் மாட்டப்பட்டிருந்த ஆயத்துல் குர்சி படம் அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக21.08.14அன்று இஷாவிற்குப் பிறகு ஜகரிய்யா காம்பவுண்ட் வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான் இஸ்லாம் கூறும் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக19.08.14அன்று மக்ரிபிற்குப் பிறகு பள்ளிவாசல் வீதியில் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான் தொலைக்காட்சியும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17.08.14ஞாயிற்றுக் கிழமை அன்று முதலாவது மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் சகோ. அன்சர்கான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 19.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 17.08.14 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. செய்யது அலி அவர்கள் உறவுகளுக்கு முன்னுரிமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 23.08.14 அன்று சூனியம் குறித்து டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் அறிவித்த சவால் குறித்து மொத்தம் மூன்று பேனர்கள் வைக்கப் பட்டன.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 22.08.14 வெள்ளிக்கிழமை அன்று தாராபுரத்தை சேர்ந்த சகோதரி "நூருன்னீஷா அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக ரூ.2500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.