Wednesday, 30 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத் தக்வா மர்கஸ் எதிரில் உள்ள தக்வா திடலில் 29.07.2014 காலை 8.15 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை  நடை பெற்றது. 







தொடர்ந்து சகோ. ஆஜம் அவர்கள்  ரமலான் தரும் படிப்பினை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.  
அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க அறிவுத் திறன் போட்டி _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 27.07.14  அன்று ரமளான் இரவு பயனை அடுத்து மார்க்க அறிவுத் திறன் போட்டி நடைபெற்றது. இதில், சரியாக பதிலளித்த சகோதரருக்கு சொர்க்கம் நரகம் எனும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 27.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 27.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் முஸ்அப் பின் உமைர்(ரலி) வரலாறு குறித்து தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 29 July 2014

மார்க்கம் அறிவோம் : நோன்பு பெருநாள் சட்டங்கள்


நோன்பு பெருநாள் சட்டங்கள் 


*   காலையில் விரைவாக தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.


*   ஏதாவதொன்றை சாப்பிட்டுவிட்டு தொழுகைக்கு செல்ல வேண்டும்.


*   பள்ளிவாசலில் தொழாமல் திடலில் தொழ வேண்டும்.


* ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் தொழுகை திடலுக்கு செல்ல வேண்டும். 


*   முன், பின் சுன்னத்துகள் பெருநாள் தொழுகைக்கு இல்லை.


*   பாங்கோ இகாமத்தோ இல்லை.


* இரண்டு ரக்அத் தொழுகையில் முதல் ரக்அத்தில் கூடுதலாக 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் கூடுதலாக 5 தக்பீர்களும் சொல்ல வேண்டும்.


* கூடுதல் தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்துவதோ, அவிழ்த்து கட்டவோ கூடாது.


*    தொழுகைக்குப் பிறகு இருக்கும் உரையில் கலந்து கொள்ள வேண்டும்.


*    மிம்பரில் நின்று உரை நிகழ்த்தக் கூடாது.


* எந்த வழியில் தொழுகைக்கு சென்றோமோ அதற்கு மாற்றமான வழியில் வீடு திரும்ப வேண்டும்.


* பெருநாள் தினத்தன்று அல்லாஹ்வை அதிகம் அதிகமாக பெருமைப்படுத்த வேண்டும். துதிக்க வேண்டும். அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.


Monday, 28 July 2014

29.07.14 - நோன்பு பெருநாள் தினம்

ரமளான் மாதத்தின் 29 ஆம் நோன்பு நாளான இன்று (28.07.14 - திங்கள் கிழமை) தமிழகத்தில் பிறை தென்பட்டுவிட்டது. 

எனவே நாளை (29.07.14 - செவ்வாய் கிழமை) நோன்பு பெருநாள் தினம் ஆகும். 




அந்நாளில் அல்லாஹ்வை அதிகம் அதிகம் பெருமைப்படுத்தி துதிப்போமாக. 


நமக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவோமாக.




ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 27.07.14


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 27.07.2014 அன்று ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில், சகோ.சேக் மைதீன்   அவர்கள் "பிரார்த்தனை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 27 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 26.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 26.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு, ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) வரலாறு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக, 27.07.14  அன்று பெண்களுக்கான சிறப்பு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மார்க்க சிந்தனையும் பெண்களின் நிலையும்  என்ற தலைப்பில் சகோதரி. ஆயிஷா பர்வீன் ஆலிமா  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

400 நோட்டீஸ்கள் விநியோகம் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 25.07.14 அன்று ஃபித்ரா மற்றும் பெருநாள் தொழுகை சட்டங்கள் என்ற தலைப்பில் 400 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

300 நோட்டீஸ்கள் விநியோகம் _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக, 26.07.14  அன்று லைலத்துல் கத்ர் இரவு மற்றும் பெருநாள் சட்டங்கள் குறித்து 300 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பித்ரா குறித்து நோட்டீஸ் விநியோகம் _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஆர்.பி.நகர் கிளை சார்பாக, 26.07.14  அன்று ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் எனும் தலைப்பில் 400 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 25.07.14

திருப்பூர் மாவாட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 25.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது.
இதில், சகோ.தவ்ஃபீக்  அவர்கள் குர்ஆன் கூறும் அற்புதங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை முறை பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-7-2014  அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, தொழுகை முறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் தொழுகை முறை குறித்து பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இலவசமாக 40 உணர்வு பேப்பர்கள் விநியோகம் _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 25.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள்  இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை _ மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.07.2014  அன்று ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 26 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 25.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  25.07.14 அன்று  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 









இதில், சகோ. அன்சர்கான் M.I.Sc.  அவர்கள் மரணமும், சொர்க்கமும்  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை - 24.07.14

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 24.07.14  அன்று ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. இதில், சகோ.யாஸீன் அவர்கள் மண்ணறை வாழ்க்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி - 24.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக, 24.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. பிலால்  அவர்கள் நிலையான மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி ரூ.4000 /- _ உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 25.07.2014 அன்று திருப்பூர் காங்கயம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரி சரஸ்வதி  அவர்களின் புற்று நோய் சிகிச்சைக்காக  ரூ.4000/- மருத்துவ உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

1000 நோட்டீஸ்கள் விநியோகம் _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.07.2014  அன்று ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்  குறித்தும் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்தும் 1,000   நோட்டீஸ்கள்   உடுமலை பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 24.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.07.2014  அன்று ரமலான் இரவு பயான் நடைபெற்றது. 









இதில், சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "நரக வேதனை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..



ரமளான் இரவு பயான் _ உடுமலை - 22.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.07.2014  அன்று ரமலான்  இரவு பயான் நடைபெற்றது. 







இதில்,  "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் சகோதரி. ஷஹானா  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..


ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 23.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 23.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் யூதர்களின் வாழ்வும் வரலாறும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

Thursday, 24 July 2014

மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-7-2014  அன்று இஷா தொழுகைக்குப் பின் மாணவர்களுக்கான தர்பியா பயிற்சி வகுப்பு   நடைபெற்றது. 






இதில் முதலாவதாக சகோ. அன்சர் கான் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பிலும், அதை தொடர்ந்து சகோ.முஹம்மது சலீம் அவர்கள்  மாணவரணியின் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 20 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ் .

ஃபித்ரா குறித்து 10,000 நோட்டீஸ்கள் _ திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்  குறித்தும் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்தும் 10,000   நோட்டீஸ்கள்   அச்சடிக்கப்பட்டு   கடந்த   18.07.14   அன்று   மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிளைகளுக்கும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...