Wednesday, 23 July 2014

ரூ.2000 கல்வி உதவித் தொகை _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14 அன்று நல்லூர் பகுதியைச் சார்ந்த  கரிஸ்மா என்ற மாணவிக்கு கல்வி உதவித் தெகையாக ரூ.2000 அவரின் தாயாரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 21.071.4

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 21.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.சதாம் உசேன் அவர்கள் அழைப்புப் பணி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

வாழ்வாதார உதவி ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14 அன்று சத்தியா நகர் பகுதியைச் சார்ந்த முபாரக்  என்ற சகோதரருக்கு கடன்  இருப்பதால் அவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

சூனியம் குறித்து 30 போஸ்டர்கள் _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக கடந்த 12.07.14 அன்று சூனியம் குறித்து பி.ஜே அவர்கள் சவால் விடுத்த போஸ்டர் மொத்தம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

உடுமலை கிளை சார்பாக ரூ.3000 வாழ்வாதார உதவி..

திருப்பூர்    மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 21.07.2014 அன்று உடுமலையை சேர்ந்த ஏழை சகோதரி  சுபைரா பானு என்பவருக்கு ரூ.3,000 வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்..



ரூ.5000 வாழ்வாதார உதவி _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14  அன்று பழகுடோன் பகுதியைச் சார்ந்த கணவரைப் பிரிந்து வாழும் ஜெரீனா என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக  ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மருத்துவ உதவி ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை சார்பாக 21.07.14 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் வசிக்கும்  அப்பாஸ் என்ற சகோதரரின் மகன் ஷேக் அப்துல்லாஹ் நரம்பியல் நோயால் பதிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய மகனுக்கு சிகிச்சை செய்வதற்காக மருத்துவ உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக மருத்துவ உதவி ரூ.2500

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14 அன்று டூம்லைட் பகுதியில் வசிக்கும் பஸிலா என்ற பெண்மணியின்  கணவர் ஹக்லாக்  என்பவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதால் அவருக்கு சிகிச்சை செய்வதற்கு மருத்துவ உதவியாக ரூ.2500 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வாழ்வாதார உதவியாக ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14  அன்று பெரிய தோட்டம் பகுதியைச் சார்ந்த கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழும் மும்தாஜ் என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவியாக ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21.07.14  அன்று காயிதே மில்லத் பகுதியில் வசிக்கும் ரம்ஜான் என்ற சகோதரிக்கு கர்பப்பையில் இருக்கும்    பிரச்சனைக்கு  சிகிச்சை  பெறுவதற்காக மருத்துவ உதவியாக  ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளையின் மருத்துவ உதவி ரூ.3000

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14  அன்று பெரிய கடை வீதியில் வசிக்கும் சர்மிளா என்ற பெண்மனியின் மகன் ஷாருக்கான் என்ற சிறுவனுக்கு தலையில் ஸ்கேன் செய்ய மருத்துவ உதவியாக ரூ.3000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மருத்துவ உதவி ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக கடந்த 21.07.14 அன்று ஜம்ஜம் நகர் பகுதியைச் சார்ந்த சாயிதா என்ற பெண்மணிக்கு  மருத்துவ உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.5000 வாழ்வாதார உதவி _ கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக கடந்த 21.07.14 அன்று பாழமுருகன் நகர் பகுதியைச் சார்த்த ரஷீதா என்ற கணவனை இழந்த பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக  ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 21.07.14 அன்று ஏண்டனி எனும் பிற மத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. 









அவருக்கு குர்ஆனும், இயேசு இறை மகனா போன்ற ஐந்து புத்தகங்களும், குர்ஆன் இறை வேதமா? என்ற தலைப்பில் இருக்கும் டிவிடிகளும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 22 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 21.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 21.07.2014 அன்று  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "திருக்குர்ஆனில் அறிவியல் உண்மைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, புரஜக்டர் படக்காட்சிகள் மூலம் விளக்கியது அனைவருக்கும் உபயோகமாக மனதில் பதியும் வண்ணம் அமைந்தது. 
அல்ஹம்துலில்லாஹ்...

30 மினி போஸ்டர்கள் _ VKP கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  20.07.2014 அன்று  உணர்வு இதழில் பூமிக்கு அடியில் மிகப்பெரும் நீர்தேக்கம் என்ற தலைப்பில் வெளியான இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் கண்டுபிடிப்பை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக 30 மினி போஸ்டர்கள் DTP அடித்து ஒட்டப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா குறித்து மினி போஸ்டர்கள் _ VKP கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  20.07.2014 அன்று பித்ரா சம்பந்தமாக பித்ரா தொகையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக 30 மினி போஸ்டர்கள்  DTP அடித்து ஒட்டப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க அறிவுத் திறன் போட்டி _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 20.07.14 அன்று ரமளான் இரவு பயானுக்குப் பிறகு மார்க்க அறிவுத் திறன் போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், சரியான பதிலை அளித்த சிறுமிக்கு சொர்க்கம் நரகம் எனும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 20.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 20.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் சல்மான் ஃபார்ஸி(ரலி) வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 20.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 20.07.2014 அன்று இரவு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், "மஹ்ஷரில் மனிதனின் நிலை” எனும் தலைப்பில் சகோதரி. ஷாலு அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான சிறப்பு பயான் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த ஞாயிறு 20-7-2014 அன்று பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் 30 க்கும் மேற்ப்பட்ட   சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 19.07.14



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், மாநிலப் பொதுச்செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரபு பயான் _ மங்கலம் கிளை - 17.07.14



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.07.14 மற்றும் 17.07.14 ஆகிய இரு தினங்கள் இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில், சகோ.யாசீன் அவர்கள் இஸ்லாத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவச விநியோகம் _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டன.. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...