Monday, 7 July 2014

ரமளான் இரவு பயான் _ காங்கயம் கிளை - 29.06.14

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 29.06.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் ரமலான் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 29.06.14

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-6-2014 அன்று இரவுத் தொழுகைக்குப் பின் இரவு பயான் நடைபெற்றது. இதில், தீமைக்குத் துணை போகாதீர்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.சி  அவர்கள் உரையாற்றினார்கள்.

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக கடந்த 06.07.14  அன்று ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில், ரமளானை முடிவு செய்வது எப்படி? என்பது குறித்து புஹாரியில் 1907,1909 எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம்    அளிக்கப்பட்டது.

வெங்கடேஸ்வரா கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 06.07.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது ஒலி அவர்கள் பெண்களின் பொறுப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த ஞாயிறு 6-7-2014 அன்று சிறப்பு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லீமா (ஆலிமா)  அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 40 க்கும்  சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் முழுவதும் மார்க்க அறிவு திறன் போட்டி_ மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை  சார்பாக புனித குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தை மேலும் சிறப்பிக்கும் வகையிலும் மார்க்க சிந்தனையை வளர்த்து கொள்ளும் வகையிலும் ரமலான் மாதம் முழுவதும்  குர்ஆன் வசனங்களை தெரிந்து கொள்வதற்காக  தினமும் இரவுத் தொழுகைக்குப் பின் குர்ஆன் அத்தியாங்களிலிருந்து கேள்விகளை வினாத்தாள்கள் மூலமாக   மக்களுக்கு வழங்கப்பட்டு மார்க்க அறிவுத் திறன் போட்டி நடைபெற்று வருகிறது. 



ஆண்களும் பெண்களும் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கின்றனர் . அல்ஹம்துலில்லாஹ் .

சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மினி பேனர்கள் _ மங்கலம் கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக கடந்த 2-7-2014 அன்று,  ரமலான் மாதம் மெகா டிவியில் நடைபெறும் சஹர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி குறித்து, 50 மினி போஸ்டர்கள்  மங்கலம் பகுதியில் அனைத்து இடங்களிலும்  ஒட்டப்பட்டது.

40 உணர்வு பேப்பர்கள் இலவச விநியோகம் _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 4.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை..

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 4.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக ஹதீஸ் வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-07-2014 அன்று ஃபஜ்ரு தொழுகைக்கு பின் ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில் ஹதீஸ் வாசிக்கப்பட்டு அதற்குரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா_ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக கடந்த 06.07.14  அன்று பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா  நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி குர்ஆன் படிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 6 July 2014

குர்ஆன் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர்  கிளை சார்பாக கடந்த  05.07.14  அன்று குர் ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள், பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 5 July 2014

வாழ்வாதார உதவி ரூ.2000 /- _உடுமலை கிளை

TNTJ  திருப்பூர்    மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 04.07.2014 அன்று உடுமலையை சேர்ந்த ஏழை சகோதரி  ரம்ஜான் பேகம் அவர்களுக்கு ரூ.2,000 வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது.

ஆதரவு இல்லங்களுக்கு ரூ.33,200 நிதியுதவி_உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   சார்பாக நடத்தப்படும் சிறுவர் இல்லம், மற்றும் முதியோர் இல்லத்திற்காக  கடந்த 04.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில் சூல் செய்யப்பட்டது . 

வசூல் செய்யப்பட்ட தொகை (15000 + 4700 +13500) மொத்தம் ரூ.33,200 நிதியை சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்களிடம்  கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


 அல்ஹம்துலில்லாஹ்...


சஹர் நேர நிகழ்ச்சி குறித்து 3 பேனர்கள்_வெங்கடேஷ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக 03.07.14  அன்று, மெகா டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து 3 பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....

ஜனாஸாவிற்கு ஓதும் துஆ விநியோகம்_ மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04-07-2014 அன்று இறந்தவருக்காக செய்ய வேண்டிய துஆ என்ற தலைப்பில் ஆயிரம் (1000) விசிட்டிங்  கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும் அதில், ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும் என்று தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

சஹர் நேர நிகழ்ச்சி குறித்து 30 சிறிய பேனர்கள்_மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின்  சார்பாக 05-07-2014 அன்று மெகா டிவியில் ஒளிபரப்பாகும் இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்ற நிகழ்ச்சி குறித்து  30 மினி போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 05.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் வறுமை என்ற தலைப்பில் புஹாரியில்   5373, 2069, 3158, 5091 எண்ணில் இருக்கும் ஹதீஸ்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

சஹர் நேர நிகழ்ச்சி குறித்து நோட்டீஸ் விநியோகம் _ அனுப்பர்பாளையம் கிளை..

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்   கிளை சார்பாக கடந்த 04.07.14 அன்று  டிஎன்டிஜே சார்பாக ஒளிப்பரப்பு செய்யப்படும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி  குறித்து 1000 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டன. 
அல்ஹம்து லில்லாஹ்..




Friday, 4 July 2014

மார்க்கம் அறிவோம் : ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

இரவு நேரத்தில் நின்று வணங்குதல்

குடும்பத்தாரையும் நன்மை செய்ய தூண்டுதல்


      (ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்;  (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
ஆதாரம் : புஹாரி (2024)


حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ .
(بخاري 2024)




இஃதிகாஃப்  இருந்து நற்காரியங்களை செய்தல்

குடும்பத்தாரையும் இஃதிகாஃப் இருக்க வைத்தல்


     நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்தனர்.
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
ஆதாரம் : புஹாரி (2026)


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ
(بخاري 2026)

மார்க்கம் அறிவோம் : ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

தானதர்மங்களை அதிகமாக செய்ய வேண்டும்

திருக்குர்ஆனை ஒத வேண்டும்


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
            அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
ஆதாரம் : புஹாரி (6) (1902)


حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ ح و حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يُونُسُ وَمَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ نَحْوَهُ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (بخاري 6)

அலங்கியம் கிளை சார்பாக சுன்னத் வல் ஜமாஅத்திற்கு கடிதம்....

        திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 30.06.14  அன்று அலங்கியத்தில் இருக்கும் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், சஹர் நேரம் துவக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு பாங்கு சொல்வது தான் நபிவழி என்றும் அதற்கு மாறாக, நாகூர் ஹனீஃபா போன்றோரின் பாடல்களை ஒலிபரப்பு செய்வது தவறானது என்று ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..



நோன்பின் பயன்கள்_ஆண்டியக்கவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 03.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. அதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் பயன்கள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 3 July 2014

மார்க்கம் அறிவோம் : ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
               உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஆதாரம் : புஹாரி (1905)



حَدَّثَنَا عَبْدَانُ عَنْ أَبِي حَمْزَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ بَيْنَا أَنَا أَمْشِي مَعَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
(بخاري 1905)

மார்க்கம் அறிவோம்: ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

கெட்ட பேச்சுகள் கூடாது

சச்ரவுகள் செய்யக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் "நான் நோன்பாளி!'' என்று அவர் சொல்லட்டும்! 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1904)


حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ .
(بخاري 1904)



அறிவற்ற காரியங்களை செய்யக் கூடாது



    நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால், நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
ஆதாரம்: புகாரி (1894)



حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا
(بخاري 1894)